வணக்கம் நண்பர்களே!
புதன் கிரகத்தால் ஏற்படும் தோஷத்திற்க்கு பரிகாரம் என்ன என்று இப்பதிவில் பார்க்கலாம்.
அவசரயுகத்தில் சோதிடர்களும் அவசரமாக இருப்பதால் இந்த கிரகத்தை எல்லாம் ஏன் பார்க்கிறோம் என்று விட்டுவிடுகிறார்கள். ஒருவருக்கு அவரை சார்ந்த பிரச்சினைக்கு புதன் கிரகமும் காரகம் வகிக்கலாம். உங்களின் ஜாதகத்தை பார்த்து புதன் தான் பிரச்சினையை கொடுக்கிறது என்றால் புதனுக்குரிய பரிகாரத்தை நாம் செய்யும்பொழுது அந்த கிரகத்தின் பாதிப்பில் இருந்து தப்பிவிடலாம்.
புதனுக்கு பரிகாரம்
புதன் கிரகத்திற்க்கு விஷ்ணு காரகம் வகிப்பதால் புதன்கிழமையில் விஷ்ணு பகவானை விரதம் இருந்து வணங்கிவந்தால் புதனின் தோஷத்தில் இருந்து தப்பிக்கலாம்.
உங்களுக்கு வசதி இருந்தால் ஒரு முறை புதன்கிழமையில் சுதர்சன ஹோமத்தை செய்யலாம்.
உங்களுக்கு சுதர்சன ஹோமத்தை செய்யமுடியவில்லை என்றால் சங்குவை கோலம் போட்டு அதனை சுற்றி விளக்கு வைத்து பூசணிக்காயில் தீபம் ஏற்றி கோதுமை பாயசம் நைவேத்தியமாக செய்து சுதர்சன மந்திரத்தை சொல்லலாம்.
ஏழை மாணவனுக்கு பச்சை நிறத்தில் ஆடை வாங்கிக்கொடுத்து உதவலாம்.
இதில் ஏதோ ஒன்றை செய்து புதனின் தோஷத்தில் இருந்து உங்களை விடுவித்துக்கொள்ளுங்கள்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment