Followers

Thursday, August 1, 2013

உரையாடல்


வணக்கம் நண்பர்களே!
                     எனக்கு ஒரு சில நேரங்களில் விபரீதமான எண்ணங்கள் உருவாகும் அதை எனது குருவிடம் கேட்பேன் அவர் அதற்கு பதில் அளிப்பார். அப்படி ஒரு நாள் நாங்கள் பேசிய ஒரு உரையாடலை உங்களுக்கு தருகிறேன்.

நான்: சாமி செயற்கைகோள்களை செயலிழக்க நம்மால் முடியுமா

குரு: உனக்கு ஏண்டா இப்படி எல்லாம் சிந்திக்க தோன்றுகிறது. ஒரு செயலிலேயே பெரிய ஆளாக வேண்டும் என்று நினைக்கிறாய். நினைப்பு தான் பிழைப்பை கெடுக்கிறது.

நான்: இப்படி ஏதாவது செய்தால் தானே அனைத்து மக்களும் ராஜேஷ்யை பற்றி பேசுவார்கள்.

குரு: ம் பேசுவார்கள். விஞ்ஞானத்தின் வளர்ச்சியை யாராலும் தடைசெய்யமுடியாது. மெய்ஞானம் வேறு விஞ்ஞானம் வேறு. விஞ்ஞான வளர்ச்சியால் நல்லது நடைபெறும்பொழுது தடைசெய்யமுடியாது.மெய்ஞானத்தின் உள்ளே விஞ்ஞானம் இருக்கிறது. 

நான்: எப்படி சாமி மெய்ஞானத்தில் உள்ளே விஞ்ஞானம் இருக்கும்.

குரு: மெய்ஞானம் என்பதில் சோதிடமும் வரும். சோதிடத்தில் உள்ளது கிரகங்கள். கிரகங்களுக்கு உள்ளே தான் அனைத்தும் நடைபெறுகிறது. கிரகங்களுக்களின் பிடியில் தான் மனிதர்கள். மனிதர்கள் கண்டுபிடிப்பது தான் விஞ்ஞானம். கிரகங்களை பற்றி தெரிந்தவனுக்கு விஞ்ஞானத்தை கட்டுபடுத்த முடியும்.

நான்: எப்படி?

குரு: ஒரு செயற்கைகோளை கட்டுபடுத்த முடியாது. உன்னுடைய மொபையில் வரும் அழைப்புகளை மட்டும் கட்டுபடுத்த முடியும். விஞ்ஞானத்திலும் முடியும். மெய்ஞானத்திலும் கட்டுபடுத்தமுடியும். 

நான்: ஒரு மொபைலை கட்டுப்படுத்துவது எனும்பொழுது செயற்கைகோள் பெரிய விசயம் கிடையாதே

குரு: உன்னுடைய கம்யூட்டர் வைரஸ் தாக்கினால் செயல் இழக்கிறது என்று வைத்துக்கொள்வோம். பிற கம்யூட்டர்கள் அனைத்தும் வேலை செய்யும் உன்னுடைய கம்யூட்டர் மட்டும் வேலை செய்யாது. அனைத்து கம்யூட்டர்களும் வேலை செய்யாமல் செய்வது எப்பொழுது நடக்கும் அனைத்து கம்யூட்டர்களுக்கும் வைரஸ் வந்தால் நடக்கும். ஒரு மிகப்பெரிய வைரஸ்யை உருவாக்கினால் அனைத்து கம்யூட்டரும் செயழலிக்கும்பொழுது அதே போல் ஒரு வைரஸ்யை உருவாக்கி செயற்க்கைகோளுக்கு அனுப்பினால் செயற்க்கைகோள் செயலிழக்கும்.அப்படி எந்த மெஞ்ஞானியும் செய்யமாட்டார்கள்.ஏன் என்றால் மக்களுக்கு பயன்படும் எந்த ஒரு செயலையும் தடுக்க மாட்டார்கள்.

நான்: உங்களுக்கு அந்த மாதிரி ஒரு வைரஸ்யை உருவாக்க முடியுமா அதாவது மெய்ஞான வைரஸ் 

குரு: தெரியும் ஆனால் உனக்கு சொல்லிதரமாட்டேன் ஏன் என்றால் நீ சும்மா இருக்கமாட்டாய்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: