வணக்கம் நண்பர்களே!
மேலே உள்ள உதாரண ஜாதகத்தில் லக்கினாதிபதியான சனிபகவான் நான்காவது வீட்டில் நீசமாக அமர்ந்துள்ளார். சனி பகவானோடு சூரியன் சந்திரன் புதன் சேர்ந்து அமர்ந்துள்ளது.
நாம் பார்க்க வேண்டியது சுகஸ்தானம் என்ற நான்காவது இடம். நான்காவது இடத்தில் உள்ள செவ்வாய் ஐந்தாவது வீட்டில் அமர்ந்துள்ளார். சுக்கிரனின் சொந்த வீடான ரிஷபத்தில் அமர்ந்துள்ளார். நான்காவது வீட்டு அதிபதி அதற்கு இரண்டாவது வீட்டில் அமர்ந்துள்ளது இது ஒரு நல்ல அமைப்பு இதன் வழியாக அவருக்கு பல கோடி பெறுமான சொத்துக்கள் சேரும். அப்படியே சேர்ந்தது. சென்னையில் பல இடங்களில் வீடு கட்டினார். நன்றாக தான் போய்க்கொண்டு இருந்தது.
உங்களுக்கே தெரியும் இந்த ஜாதகத்தில் நான்காவது வீட்டில் நான்கு கிரகங்கள் இருந்தாலும் நான்காவது வீட்டு அதிபதி நல்ல நிலைமையில் இருக்கிறார். நான்காவது வீட்டில் அடி விழுந்தாலும் அதிபதியின் நிலைக்கொண்டு அவர் தப்பித்துவிடுவார் என்று நினைக்கலாம். சென்னையில் இருப்பதால் அவரை நான் அடிக்கடி சந்தித்தது உண்டு.
கொஞ்ச காலத்தில் எல்லாம் சொத்துக்கள் அனைத்தும் வீணாக சென்றன. ஒரு இடத்திலும் உருபடியான ஒரு வாடகைக்கு கூட ஆள்கள் வரவில்லை. அனைத்தும் வீணாக சென்றது பல இடங்கள் வந்த விலைக்கு விற்று தீர்த்தனர். அதிகபட்சமாக ஒரு நிகழ்வு நடந்தது இவரின் மனைவியும் இறந்தார்கள். ஏதோ ஒரு நோய் என்று மருத்துவமனையில் சேர்த்தார்கள் பிணமாக தான் வீடு வந்து சேர்ந்தார். இடி விழுந்தது போல் ஆகிவிட்டது இந்த நபருக்கு. இவருக்கு இரண்டு பையன்கள் இருக்கிறார்கள் அனைவரும் தனித்தனியாக மாற்றப்பட்டார்கள்.
ஆயிரம் கோடி பணம் இருந்தாலும் வீட்டில் பெண்கள் இருக்கவேண்டும் இல்லை என்றால் அவர்களின் வாழ்க்கை என்பது வீணான ஒன்றாக இருக்கும். பையன்களுக்கு திருமணம் நடைபெறவில்லை அதனால் மூன்று பேரும் தனியாக தான் இருக்கிறார்கள்.இவரின் ஜாதகத்தை பல வருடங்களுக்கு முன்பே பார்த்திருக்கிறேன் அப்பொழுது எனக்கு தெரியவில்லை. இப்பொழுது தான் அனைத்தும் பிடிப்பட்டது.
இந்த ஜாதகத்தை பார்த்துவிட்டு ஆயிரம் கேள்விகள் கூட உங்களுக்கு வரும் உண்மை தான் இதனை நான் அனுபவத்தில் பார்த்திருக்கிறேன்.அனுபவத்தில் நான் சொல்லுவது போல் நடைபெற்றது.
இந்த ஜாதகத்தை பார்த்துவிட்டு ஆயிரம் கேள்விகள் கூட உங்களுக்கு வரும் உண்மை தான் இதனை நான் அனுபவத்தில் பார்த்திருக்கிறேன்.அனுபவத்தில் நான் சொல்லுவது போல் நடைபெற்றது.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment