வணக்கம் நண்பர்களே!
நான் எத்தனை முறை சொன்னாலும் அனைத்தையும் மறந்துவிட்டு மறுபடி மறுபடி எனக்கு போன் செய்து சந்தேகம் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களுக்கு ஒவ்வொன்றாக சிறு குழந்தைக்கு சொல்லுவது போல் சொல்லவேண்டியுள்ளது.
பரிகாரம் செய்வதற்க்கு செல்லும்பொழுது அது ஒன்றும் குடும்பவிழா அல்ல என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். உங்களின் கர்மத்தை குறைக்க உங்களுக்கு பரிகாரம் செய்ய போகிறீர்கள் என்பதால் நீங்கள் தனியாக செல்லலாம் அல்லது உங்களின் குடும்ப நபர் ஒருவரை கூட்டிக்கொண்டு செல்லலாம். உதவி தேவைப்படும் என்பதால் ஒருவரை மட்டும் அழைத்துக்கொண்டு செல்லலாம்.
உங்களின் வீட்டில் அதேப்போல் தோஷம் உடையவர்கள் இருந்தால் அவர்களை கூட்டிக்கொண்டு செல்வது நல்லது. தோஷத்தை கழிக்க செல்லலாமல் வெறும் சாமி தரிசனம் என்று சென்றால் உங்களின் குடும்பத்தை அழைத்துக்கொண்டு செல்லலாம்.
ஒரு தோஷம் கழிக்க செல்லும்பொழுது அந்த தோஷம் கழிப்பதன் பாதிப்பு கூட வருபவர்களுக்கு சேரும் வாய்ப்பு இருப்பதால் இதனை தவிர்ப்பார்கள். நாங்கள் எல்லாம் பரிகாரம் செய்யவதற்க்கு போனால் உடல்கட்டு இல்லாமல் செய்ய போகமாட்டோம் அதைப்போல் எங்களுடன் வருபவர்களுக்கும் இதனை செய்துவிடுவோம்.
ஒரு பரிகாரம் செய்வதற்க்கு முன்பு உங்களின் வீட்டில் குலதெய்வத்தை வணங்கிவிட்டு செல்ல வேண்டும். அப்படி வணங்கிவிட்டு சென்றால் மட்டுமே நீங்கள் பரிகாரம் செய்ததின் பலனை அடையமுடியும்.
பரிகாரம் செய்வதற்க்கு என்று நாட்களும் உள்ளன. இந்தந்த நாட்களில் செய்தால் மட்டுமே அந்த பரிகாரம் வெற்றி அடையும் என்று நமது முன்னோர்கள் எழுதி வைத்துவிட்டு சென்றுள்ளார்கள் அந்த நாட்களை எல்லாம் வரும் நாட்களில் பார்க்கலாம்.
பரிகாரம் செய்வதற்க்கு என்று நாட்களும் உள்ளன. இந்தந்த நாட்களில் செய்தால் மட்டுமே அந்த பரிகாரம் வெற்றி அடையும் என்று நமது முன்னோர்கள் எழுதி வைத்துவிட்டு சென்றுள்ளார்கள் அந்த நாட்களை எல்லாம் வரும் நாட்களில் பார்க்கலாம்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment