Followers

Friday, August 23, 2013

விளக்கம்


வணக்கம் நண்பர்களே!
                     நீண்ட நாட்களாக கமெண்ட்களை பார்க்கவில்லை இன்று தான் அதனை எல்லாம் பார்த்தேன். பல பேர்கள்  கேள்வி கேட்டு இருக்கிறார்கள் அவர்களுக்கு பதிலை பதிவிலேயே தந்துவிடுகிறேன். பல பேர் வழக்கமாக திட்டியும் உள்ளார்கள் அதற்கு நான் என்ன செய்யமுடியும். அனைத்தையும் என்னுடைய அனுபவத்தில் இருந்து தான் தருகிறேன் எடுத்துக்கொள்வதும் எடுத்துக்கொள்ளாததும் உங்களின் பொறுப்பு மட்டுமே.

சில திராவிட கட்சியை சார்ந்த நண்பர்கள் கேள்வி கேட்டு அனுப்பி இருந்தார்கள். உங்களுக்கு நான் விளக்க என்னால் முடியாது. இல்லை என்று யாரும் சொல்லலாம். இருக்கிறது என்று சொல்லுவது ஒரு சிலரால் மட்டுமே சொல்லமுடியும். அதற்கு அவன் புண்ணியம் செய்து இருக்கவேண்டும். பெரியார் வந்து கடவுள் இல்லை என்று சொன்னாரே தவிர மாற்றுவழி என்ன என்று அவர் சொல்லிவிட்டு போகவில்லை. சொல்லபோனால் பெரியார் வந்த பிறகு தான் அதிகமான கோவில்களை கட்டஆரம்பித்தார்கள்.

ஜாதககதம்பத்தில் உள்ள கருத்துக்கள் உங்களுக்கு புரியவேண்டும் என்றால் ஆன்மீகம் என்பது உண்மை என்று நம்பி அதன் பிறகு ஒரு குருவிடம் தீட்சை வாங்கி நீங்கள் பயிற்சி செய்தால் ஜாதககதம்பம் ஒரு பல்கலைகழகம் என்று அப்பொழுது புரியும். இதனை வைத்தே அனைத்தையும் வெல்ல முடியும் என்பது அப்பொழுது மட்டுமே புரியும்.

ஜாதககதம்பத்தில் வரும் அனைத்து கருத்துக்களும் என்னுடைய அனுபவத்தில்  இருந்து எடுத்த கருத்துக்கள் எழுதிக்கொண்டு இருக்கிறேன். அனைத்தும் உண்மை. நீங்கள் காணும் இந்த உலகம் இது மட்டும் கிடையாது. அதற்குமேல் பல உலகங்கள் இருக்கிறது என்பதை காட்டுவதற்க்கு இதனை எழுதுகிறேன். அனைத்தையும் அனுபவித்தால் மட்டுமே அது தெரியவரும்.

பதிவு உலகத்தில் ஆன்மீகபதிவுகள் இன்றைக்கு குறைவாக வருகிறது. ஆன்மீகத்தில் நிறைய பதிவுகள் தரவேண்டும் என்ற காரணத்தால் மட்டுமே அதிக பதிவுகளை நேரம் கிடைக்குமபொழுது எல்லாம் எழுதிக்கொண்டு இருக்கிறேன்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: