Followers

Friday, August 30, 2013

ராகு தசா பலன்கள் பகுதி 14


வணக்கம் நண்பரகளே!
                    நான் சொல்லுவது அனுபவத்தில் இருந்து எடுத்து சொல்லுகிறேன். ஒரு சிலருக்கு நடக்கலாம் அல்லது நடக்காமலும் போகலாம். இது சோதிடபுத்தகத்தில் இருக்கின்றதா என்று எனக்கு தெரியவில்லை. புத்தகத்தில் இருந்தாலும் நல்லது அப்படி புத்தகத்தில் இல்லாமல் இருந்தால் அனுபவத்தில் சொல்லுவது தானே என்று எடுத்துக்கொள்ளுங்கள்.

                    மேஷராசியில் ராகு நிற்கிறது என்று வைத்துக்கொள்வோம். இவருக்கு ராகு தசா நடைபெறுகிறது என்று வைத்துக்கொண்டால் என்ன புத்தி இவருக்கு நல்லதை செய்யும் என்று பார்க்கலாம்.

மேஷத்தில் அமர்ந்து ராகு தசா நடைபெறுகிறது.

ராகுவின் சுயபுத்தி
ராகு தசா சூரியபுத்தி 
ராகு தசா குரு புத்தி

இந்த மூன்று தசாவின் புத்திகளும் நன்றாக இருக்கும் என்று கூறலாம்.  நான் பார்த்த பல ஜாதகங்களுக்கு நல்லதை செய்து இருக்கிறது. ராகு இருந்த இடத்தின் பலனை தரும் என்பதால் இவ்வாறு நல்லது நடந்துள்ளது.

தான் நிற்க்கும் வீட்டிற்க்கு 1, 5, 9 என்ற வீட்டின் புத்தி காலங்களில் நல்லதை தரும். ராகு நிற்க்கும் வீட்டை லக்கினம் போல் எடுத்துக்கொண்டால் சுயபுத்தி நல்லது செய்யும். நிற்க்கும் வீட்டிற்க்கு ஐந்தாவது வீட்டு புத்தி நல்லது செய்யும் அதாவது பூர்வபுண்ணியத்தால் நல்லது செய்யும் என்று சொல்லலாம். ஒன்பதாவது வீட்டின் புத்தி நல்லது செய்யும் பாக்கியஸ்தானத்தால் நல்லது செய்யும் என்று சொல்லவும்.

மேஷ லக்கினம் என்று வைத்துக்கொள்வோம். இரண்டாவது வீட்டில் ராகு நின்றால் (ரிஷபத்தில்) எப்படி பலன் வரும் என்று பார்த்தால் சுயபுத்தி நன்றாக இருக்கும்.ராகு அமர்ந்த வீட்டை லக்கினம் போல் எடுத்துக்கொள்ளவேண்டும். ஐந்தாவது வீடான கன்னி ராசி அதிபதி புதனின் புத்தி மற்றும் ஒன்பதாவது வீடான மகர ராசி அதிபதி சனியின் புத்தி நன்றாக இருக்கும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

5 comments:

Anonymous said...

கேந்திர ஸ்தானங்களை எவ்வாறு கணக்கிடுவது ?

rajeshsubbu said...

வணக்கம் வரும் நாட்களில் பதிவில் தருகிறேன்.

தமிழ்செல்வன் said...

Hello sir...
i have small doubt ...
Ragu & Kethu moves as anti-clock wise..but here u said clock wise movement...
மேஷ லக்கினம் என்று வைத்துக்கொள்வோம். இரண்டாவது வீட்டில் ராகு நின்றால் (ரிஷபத்தில்) எப்படி பலன் வரும் என்று பார்த்தால் சுயபுத்தி நன்றாக இருக்கும்.ராகு அமர்ந்த வீட்டை லக்கினம் போல் எடுத்துக்கொள்ளவேண்டும்.
ஐந்தாவது வீடான மகர ராசி அதிபதி சனியின் புத்தி மற்றும் ஒன்பதாவது வீடான கன்னி ராசி அதிபதி புதனின் புத்தி நன்றாக இருக்கும்.

rajeshsubbu said...

வணக்கம் நண்பரே. ராகு கேது சுற்றுவதை சொல்லுகிறீர்கள். லக்கினத்தை வைத்து பார்க்கும்பொழுது கிளாக் வைஸ வைத்து கணக்கு வருவதால் நான் சொல்லுது போல் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும். இது ஒன்றும் விதி மாதிரி இல்லை நண்பரே நான் பல பேர்க்கு அனுபவத்தில் பார்த்தபொழுது நடந்துள்ளது. அதனை உங்களுக்கு சொன்னேன். தங்களின் கேள்வி நன்றி நண்பரே

தமிழ்செல்வன் said...

Thanq Sir..