வணக்கம் நண்பர்களே!
கண்திருஷ்டி பரிகாரத்தைப்பற்றி நண்பர் KJ எழுத சொல்லிருந்தார். அவர் கேட்டு ஒரு வாரம் சென்றுவிட்டது. இன்று தான் எழுதும் வாய்ப்பு வந்தது.
கண்திருஷ்டி உண்டா இல்லையா?
மனிதனின் தன் எண்ணங்களை தெரியப்படுத்த கண் ஒரு சாதனமாக பயன்படுத்துகிறான். அப்படி அவன் தன் எண்ணங்கள் நல்ல எண்ணங்களாக இருந்தால் பிரச்சினை இல்லை. தீய எண்ணங்களாக இருந்தால் பிரச்சினையை ஏற்படுகிறது.
இதனை பயிற்சி செய்வதற்க்கு ஒரு வழி சொல்லுகிறேன் செய்து பாருங்கள். உங்களின் வீட்டில் நாய் இருந்தால் அதன் அருகில் சென்றுக்கொண்டு சுமாராக பத்து அடி விட்டு நின்றுக்கொண்டு அதனை பார்க்ககூட தேவையில்லை. உங்களின் மனதில் இப்பொழுது இந்த நாயை நான் அடிக்க போகின்றேன் என்று மனதிற்க்குள் நினைத்தாலே போதும். அந்த நாய் உங்களை பார்த்து உரும ஆரம்பித்துவிடும். நமது எண்ண அலைகள் வெளியில் செல்லுகின்றது என்பதனை இந்த நிகழ்வு மூலமே தெரிந்துக்கொள்ளலாம்.
கண்கள் வழியாக நாம் நினைக்கிறதை வெளிப்படுத்துகிறோம் நல்லது நினைத்தால் நல்லது நடக்கும் தீயது நினைத்தால் தீயது நடக்கும். இதனை மனிதர்கள் மீது மட்டும் அல்ல. எந்த உயிர் இனங்கள் மீதும் இதனை செய்யமுடியும்.
கிராமபுறங்களில் பார்த்தால் பசுமாடு இருக்கும் கன்று ஈன்று இருக்கும்பொழுது அதன் மடி பெரியதாக இருக்கும். இதனை வில்லங்க ஆட்கள் பார்த்தால் அந்த பசுமாட்டிற்க்கு மடி காம்பு வழியாக இரத்தம் வழிய ஆரம்பித்துவிடும்.
ரொம்ப கஷ்டபட ஆரம்பித்துவிடும். மனிதர்களில் எவன் நல்லவனாக இருக்கிறார்கள். ஒரு ஊரில் ஒருத்தன் இருந்தாலே மிகப்பெரிய விசயம். விலங்குகளுக்கு இப்படி நடக்கும்பொழுது மனிதர்களை மனிதர்கள் பார்த்து பொறாமை படமாட்டார்களா. கண்டிப்பாக படுவார்கள். அதன் பிடியில் இருந்து எப்படி தப்பிப்பது. கண் திருஷ்டி இருக்கிறாதா என்பதை எப்படி தெரிந்துக்கொள்வது.
அடுத்த பதிவில் பார்க்கலாம்
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
2 comments:
Thank a lot sir.. Waiting eagerly..
வணக்கம் சார். உங்களால் பலபேருக்கு நன்மை ஏற்படுகிறது. நன்றி
Post a Comment