Followers

Wednesday, August 7, 2013

ராகு தசா பலன்கள் பகுதி 1


வணக்கம் நண்பர்களே!
                     ஒருவருக்கு ராகு தசா நடைபெறும்பொழுது என்ன பலனை தரும் என்று பார்க்கலாம்.

ராகுக்கு ரிஷபம் உச்ச வீடாகவும் விருச்சிகம் நீச வீடாகவும் சொல்லப்பட்டு இருக்கிறது. 

உச்சத்தில் இருக்கும் ராகு தசாவில்  

நல்ல சுகவாழ்க்கையை தருவான். மிகப்பெரிய ராஜ்யத்தை ஆளும் தகுதியை ஏற்படுத்தி தருவான் செல்வவளத்தை கொட்டிக்கொடுப்பான். பணம் வந்துக்கொண்டே இருப்பது போல் செய்வான்.

ஒரு உச்ச கிரகத்தோடு ராகு சேர்ந்து தசா நடைபெற்றால்

உடலில் ஒருவித வாசனை இருந்துக்கொண்டே இருப்பது போல் செய்வான். ஆடை ஆபரணங்கள் சேர்க்க வைப்பான். பல பெண்களோடு பழக்கத்தையும் ஏற்படுத்துவான். தனவரவுகள் ஏற்படுத்திக்கொடுப்பான்.

நீசத்தில் இருக்கும் ராகு தசாவில் 

                               அரசாங்கத்தோடு பிரச்சினையை ஏற்படுத்தி தருவான். உடலில் நெருப்பு பட்டு புண் ஏற்படுத்திவிடுவான். தற்கொலை செய்துக்கொள்ளும் எண்ணத்தை உருவாக்குவான். விஷ தன்மை உடலில் உருவாகும். பாம்புகள் தீண்டும்.

நீசமான கிரகத்தோடு சேர்ந்த ராகு தசாவில் 

                                        செய்யும் தொழிலில் பிரச்சினை ஏற்படும். தொழில் செய்பவர்கள் லாபத்தை எதிர்பார்க்கமுடியாது. கெட்ட உணவினை சாப்பிடும் நிலையை உருவாக்குவான். 

பொதுவாக ராகு தசாவில் பணம் வந்துக்கொண்டே இருக்கும் ஆனால் அந்த பணத்தை தங்குகின்ற நிலையை உருவாக்க மாட்டான். வரும் பணத்தை தக்க வைத்துக்கொள்ள பரிகாரம் ராகுக்கு செய்யபடவேண்டும். ராகு எப்படி இருந்தாலும் ராகு தசா ஒருவருக்கு வரும்பொழுது காம எண்ணத்தை அதிகமாக உண்டுபண்ணுவார்.வீட்டில் சந்தேகத்தை ஏற்படுத்திவிடுவார்.

தொடர்ந்து பார்க்கலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

3 comments:

அமுதா கிருஷ்ணா said...

எனக்கு ராகு தசா(ராகு மூன்றில் சனி,செவ்வாயுடன்) குரு(8-ல்)புத்தியில் என் தந்தை அவருடைய இளவயதில்(46) இறந்தார்.
இப்போ எனக்கு குரு தசா ராகு புத்தி 2016-ல் வருது.எதாவது கெட்டது நடக்குமோ என்று பயமாக உள்ளது. குரு 8-ல் இருக்கிறார்.3க்கும்,12க்கும் அதிபதி குரு.கன்னி ராசி.மகர லக்னம்.

pratheesh said...

சிலர் ராகுவுக்கு ரிசபம் நீச வீடு என்று சொல்கிரார்கள் எது சரி அய்யா

rajeshsubbu said...

வணக்கம்
நீண்ட நாட்களுக்கு பிறகு பின்னோட்டம் இடுகிறீர்கள். குரு எட்டாவது வீடடில் இருப்பதால் அதுவும் சிம்மத்தில் இருப்பதால் தந்தையை பாதித்து இருக்கலாம். வேறு ஒன்றும் பயப்படதேவையில்லை. சகோதர சகோதரிகளி்ன் நலனில் மட்டும் அக்கறை காட்டவேண்டும்.
நன்றி