Followers

Saturday, August 17, 2013

சிந்திப்போம்


வணக்கம் நண்பர்களே !
                     நேற்றைய பதிவினை படித்துவிட்டு பல நண்பர்கள் போன் செய்து விசாரித்தார்கள். அந்த நபரை ஏன் விட்டு வைத்தீர்கள் என்று கேட்டார்கள். 

யாரையும் கெடுப்பது நமது வேலை இல்லை. அவர்களுக்கு பாடம் புகட்டவேண்டும் என்று நினைத்து இதனை செய்கிறேன். அதோடு நீ்ங்கள் எல்லாம் நன்றாக படித்தவர்கள் நீங்கள் படித்துவிட்டு என்ன செய்துக்கொண்டு இருக்கிறீர்கள் ஒரு வேலையில் சேருவது அதில் அப்படியே குப்பை கொட்டிக்கொண்டு இருப்பது. நான் படிக்காதவன் இப்படி எல்லாம் சாதிக்கும்பொழுது நீங்கள் படித்தவர்கள் எந்தளவுக்கு சாதிக்கமுடியும் என்று உங்களுக்கு ஒரு உந்துசக்தியை கொடுப்பதற்க்கு இதனை சொன்னேன்.

படிப்பது என்பது நமது அறிவை வளர்த்துக்கொள்வதற்க்கு தானே தவிர வேறு ஒன்றும் இல்லை. நீங்கள் கல்லூரியில் படித்தீர்கள் அதே படிப்பை நான் வீட்டில்  புத்தகத்தை வாங்கி படித்து அறிவை வளர்த்துக்கொண்டேன். நாம் படித்திருக்கிறோம் என்ற தலைபாரம் தேவையற்ற ஒன்று. நீங்கள் படித்திருப்பது உண்மை என்றால் உங்களால் பத்து பேருக்கு நீங்கள் வேலை தரவேண்டும் அதை விட்டுவிட்டு ஒரு கம்பெனியில் குப்பை கொட்டுவதற்க்கு எதற்க்காக படிக்க வேண்டும்?

முப்பதாயிரம் சம்பளத்தை வாங்கிவிட்டு ஒரு வீட்டை கட்டிக்கொண்டு நாங்கள் உயர்வகுப்பில் வாழ்கின்றோம் என்று அடுத்தவனை மட்டம் தட்டுக்கொண்டு வாழகூடாது. இன்று இந்தியாவில் இருக்கும் கம்பெனிகள் அதிகபட்சம் வெளிநாட்டு கம்பெனிகளாக இருக்கின்றது. ஏன் இந்தியாவில் உள்ளவன் முதலாளியாக இருக்ககூடாது. நீங்கள் முதலாளியாக வருவதற்க்கு என்ன செய்ய வேண்டுமோ அதனை செய்யவேண்டும். 

ஒரு கம்பெனியில் வேலை பார்ப்பது என்பது தவறு இல்லை. அங்கு வேலை பார்த்துக்கொண்டு அடுத்த இலக்கு என்ன என்று பார்த்து அதற்கு உங்களை தயார்படுத்தவேண்டும். பெரிய கம்பெனி தான் வைக்க வேண்டும் என்று நினைக்கவேண்டாம். சிறிய கம்பெனியை வைத்தாலே போதும் அதன் பிறகு படிப்படியாக உயர்த்திக்கொள்ளலாம்.

நான் தொழில் செய்பவர்களுக்கு உதவதே இந்தியாவில் நிறைய முதலாளிகளை உருவாக்கவேண்டும் என்ற எண்ணத்தில் தானே தவிர வேறு ஒன்றும் இல்லை. இன்று சாப்ட்வேர் துறையில் Project குறைவாக இருக்கிறது என்று சொல்லுகிறார்கள் அது எல்லாம் சுத்த பொய் உலகத்தில் செய்யமுடியாத பெரிய Project எல்லாம் இருக்கிறது. அதனை எல்லாம் எடுத்து செய்தாலே போதும் இன்னும் பல வருடங்களுக்கு நல்ல வேலை வாய்ப்பை உருவாக்கலாம்.

பெரிய கம்பெனி எல்லாம் ஆட்கள் குறைப்பதற்க்கு காரணம் ஒரு அப்பிளிகேஷன் முடிந்தவுடன்   அந்த அப்பிளிகேஷனில் அடுத்த Project வராது ஏன் வீணாக சம்பளம் கொடுப்பானே என்று வேலையில் இருந்து எடுத்துவிடுவார்கள் ஆனால் கம்பெனிக்கு வருமானம் வந்துக்கொண்டே இருக்கும் எப்படி என்றால் Maintenance என்று நல்ல வருமானத்தை பார்த்துவிடுவார்கள். எப்படி பார்த்தாலும் கம்பெனிக்கு வருமானம் வரும். அதனால் தான் நீங்கள் முதலாளியாக மாறிவிட்டால் உங்களுக்கு எப்பொழுதும் வருமானம்.

ஒரு காலகட்டத்தில் பெரிய சாப்ட்வேர் கம்பெனிகள் பெரிய பிராஜெட் எடுத்து செய்தார்கள். அவர்கள் எல்லாம் இன்று ஆட்களை வெளியில் எடுத்துவிட்டு maintencance செய்வதற்க்கு மட்டும் வெளியில் உள்ள கம்பெனியை நாடி செய்துக்கொண்டு இருக்கிறார்கள். இந்த மாதிரி பல கம்பெனிகள் இப்பொழுது நான் எடுத்து எனது நண்பர்களுக்கு கொடுத்து இருக்கிறேன். 

இதனைப்பற்றி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். சாதாரணமாக வரும் நண்பர்கள் கஷ்டப்படுவார்கள். உங்களுக்கு சொல்லுவது எல்லாம் கூடிய விரைவில் ஒரு முதலாளியாக வாருங்கள். 

இப்பொழுது என்னை நாடி நிறைய கம்பெனிகள் வருவதால் பெரும்பாலும் அனைத்து வியாபார நுட்பங்களும் நன்றாக தெரிகிறது.  இந்த ஆலோசனை கொடுத்தாலே நல்ல பணத்தை பார்க்கலாம்.

நண்பர்களே உங்களிடம் தெரிவிக்கும் கருத்து இது மட்டுமே கடவுள் ஒவ்வொரு மனிதனையும் நல்ல திறமையுடன் படைக்கிறான். அந்த திறமை அனைத்து மனிதர்களிடமும் இருக்கிறது அதனை வெளியில் காட்டுவதற்க்கு சந்தர்ப்பம் அமைந்தால் போதும் அனைவரும் திறமைசாலிகள் தான். ஒவ்வொரு மனிதனையும் மனிதனாக மதிக்கும் பக்குவம் உங்களுக்கு வரவேண்டும். வரும்பொழுது அனைத்தையும் உங்களால் சாதிக்கமுடியும். நீங்கள் சாதிப்பதற்க்கு ஆன்மீகம் ஒரு சிறந்த சக்தியை கொடுக்கிறது.

கூடிய விரைவில் நமது பிளாக்கின் வழியாக நிறைய பேருக்கு வேலை கொடுக்க எண்ணிக்கொண்டு இருக்கின்றேன். உங்களின் திறமை மட்டுமே போதுமான ஒன்று அனைத்து நாடுகளில் உள்ள மிகப்பெரிய கம்பெனியில் நீங்கள் வேலை செய்யலாம். 

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

6 comments:

dreamwave said...

I WANT JOB IN FOREIGN.

Udhayaganesh said...

Nice information...

Udhayaganesh said...

nice information to all...

rajeshsubbu said...

dreamwave said...
I WANT JOB IN FOREIGN

கண்டிப்பாக அதற்கு ஏற்பாடு செய்கிறேன்.

மெயிலில் கொஞ்சம் சிக்கல் இருந்ததால் கமெண்டை வெளியிட முடியவிலலை.இன்று தான் சரி செய்தேன்

நன்றி நண்பரே

rajeshsubbu said...

//*Udhayaganesh said...
Nice information..*//

நன்றி நண்பரே

rajeshsubbu said...
This comment has been removed by the author.