Followers

Tuesday, August 20, 2013

நம்பினால் நம்புங்கள் விளக்கம்


வணக்கம் நண்பர்களே!
                     நம்பினால் நம்புங்கள் என்று ஒரு பதிவை தந்திருந்தேன் அதில் பலபேர்களிடம் ஒரு பல சந்தேகங்கள் வரும் என்று எதிர்பார்த்தேன். ஒருவரை தவிர வேறு யாரும் இதனைப்பற்றி கேட்கவில்லை.

பெங்களுரை சேர்ந்த அருள்குமார் சார் மட்டும் கேட்டுருந்தார். சரியான சோதிட அறிவு அவருக்கு இருக்கிறது. பழங்கால சோதிடத்தை நன்றாக கற்றுவைத்திருக்கிறார். அருள்குமார் சார் வெல்டன். 

நம்பினால் நம்புங்கள் பகுதியில் ஒரு சோதிட சூட்சமம் இருக்கின்றது அதனை சரியாக கண்டுபிடித்து அவர் சொன்னார். அந்த குழந்தைக்கு குரு ரிஷபத்தில் இருக்கிறது என்று சொல்லிருந்தேன். வேறு எதனையும் நான் சொல்லவில்லை.

ஒருவருக்கு குரு கிரகத்தின் பலன் குறையும்பொழுது அவர்களின் வாழ்நாள் கேள்விகுறியாக மட்டுமே இருக்கும். இது மிகப்பெரிய சோதிட சூட்சமம் இதனைப்பற்றி யாரும் அதிகம் சொல்வதில்லை என்று நினைக்கிறேன். பூர்வபுண்ணியத்திற்க்கு மிகமுக்கிய காரகமான கிரகம் குரு. 

நான் செய்தது ஒரு சித்துவேலை மட்டுமே அது. இதனை மாந்தீரிகவாதிகளும் செய்வார்கள். அதாவது ஒரு வீட்டில் உள்ள ஒரு நபருக்கு தீங்கு விளைவிக்கும்பொழுது அந்த நபருக்கு அந்த நேரத்தில் குரு பலம் குறைவாக இருக்கவேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே அவருக்கு மாந்தீரிகததின் பாதிப்பை ஏற்படுத்த முடியும். 

குரு ரிஷபத்தில் இருக்கும்பொழுது அந்த குழந்தைக்கு குரு பலம் கிடையாது. அதனால் முதல் ஆளாக அந்த குழந்தையை கண்ணில் காட்டுகிறது. நமது எண்ணம் தீங்கு விளைவிப்பது அல்ல. சும்மா பார்த்தேன். அவர்கள் எனக்கு தீங்கு செய்தார்கள் என்று எண்ணி நானும் தீங்கு செய்யகூடாது.

அருள் சார் மட்டும் சரியாக இதனை குறிபிட்டு என்னிடம் சொல்லிருந்தார். உண்மையான நிகழ்வு தான் உங்களுக்கு குரு பலம் மட்டும் இல்லை என்றால் இந்த மாதிரி வேலைகளுக்கு நீங்கள் ஆளாகிவிடுவீர்கள். குரு பலம் இருக்கும்பொழுது இதனை தடுக்கமுடியும். 

சோதிடம் படித்தாலும் அந்த சோதிடத்தை பயன்படுத்த தெரியவேண்டும் அப்படி பயன்படுத்தினால் மட்டுமே நமக்கு வரும் கெடுதலிருந்து காப்பாற்றமுடியும். 

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

3 comments:

Arul said...

Dear Rajesh

Thanks a lot.

Regards
Arul Kumar Rajaraman

rajeshsubbu said...

வணக்கம் சார். நல்லது. தங்களால் பலபேர்கள் நன்மை அடைந்தார்கள்

rajeshsubbu said...
This comment has been removed by the author.