Followers

Tuesday, March 19, 2019

காரும் இராசியும்


வணக்கம்!
          ஒரு கார் வாங்கவேண்டும் என்றாலும் அதற்கு இராசி என்பது வேண்டும். நமக்கு கார் வாங்க யோகம் இருந்தால் நமக்கு கார் அமைந்துவிடும். கார் வாங்கிய பிறகு தான் கார் யோகம் வேலை செய்கின்றதா இல்லையா என்பது தெரியவரும்.

கார் வாங்கிய பிறகு அதனை வைத்து நாம் பராமரிக்க முடிகின்றதா என்பது தெரியவரும். கார் யார் வேண்டுமானாலும் வாங்கலாம் அதனை வைத்து ஓட்டி பராமரித்து வைத்திருப்பதில் தான் யோகம் வேலை செய்கின்றது.

கார் வாங்கிய பலர் அதனால் வெறுப்படைந்தும் இருக்கின்றனர். காரை வைத்து பராமரிக்கமுடியவில்லை என்று வெறுப்பும் அடைந்து இருக்கின்றனர். எவ்வளவு புதிய காராக இருந்தாலும் சரி பழைய காராக இருந்தாலும் சரி அதனை வைத்திருக்க நமக்கு யோகம் இருக்கவேண்டும்.

ஒரு சிலருக்கு கார் வாங்கிய பிறகு ஒரு சில இடத்தில் ரிப்பேர் ஆகிவிடும். அன்றைய தினம் பார்த்தால் நமக்கு சந்திரன் சரியில்லாத ஒரு நிலையில் இருக்கும். சந்திரன் இராசிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டுக்கொண்டு இருக்கும்.

ஒரு சில இடத்தில் கார் ரிப்பேர் ஆகிவிட்டால் நாம் அதனை உடனே சரிசெய்ய நினைத்து செயல்படுவோம். முடிந்தவரை காரை வீட்டிற்க்கு எடுத்து வர முயற்சி செய்துவிடுங்கள். அந்த காரை சர்வீஸ் செய்வதற்க்கு உடனே போககூடாது. உங்களின் காரை இரண்டரை நாள் சென்ற பிறகு அல்லது ஒரு ஐந்து நாட்களுக்கு பிறகு காரை சரிசெய்ய எடுத்துச்செல்லுங்கள்.

நமது கார் ரிப்பேர் ஆனவுடன் சர்வீஸ்க்கு சென்றால் நமக்கு நடக்கும் சந்திரன் நமது காசை வீணாக செலவு செய்ய வைக்கும். இதனை தவிர்பதற்க்கு நாம் சந்திரனின் நிலையை அறிந்துக்கொண்டு சென்றால் ஒரளவு குறைந்த பணத்திலேயே சரிசெய்துக்கொண்டு வந்துவிடலாம்.

உதாரணமாக நமது இராசிக்கு பனிரெண்டாவது வீட்டில் சந்திரன் இருந்தால் நமக்கு கார் ரிப்பேர் ஆகின்றது என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் உடனே செல்லாமல் சந்திரன் இரண்டாவது வீட்டிற்க்கு செல்லும்பொழுது செல்லலாம். அதாவது ஐந்து நாட்களுக்கு பிறகு நீங்கள் காரை சரி செய்ய செல்லலாம்.

கார் ரிப்பேர் ஆனவுடன் நீங்கள் சென்றால் உங்களை வைத்து செய்து அனுப்பிவிடுவார்கள் என்பதை மட்டும் நினைவில் வைத்துக்கொண்டு செயல்படவேண்டும். கார் என்பது மட்டும் அல்ல உங்களின் எந்த வாகனமாக இருந்தாலும் சரி இப்படி தான் ஜாதகப்படி வேலை செய்யும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: