வணக்கம்!
பலர் வெள்ளிக்கிழமை தினத்தை ஒழுங்காக பராமரித்து வருகின்றனர். அதாவது வெள்ளிக்கிழமை அன்று வீட்டை சுத்தம் செய்து வீட்டில் உள்ள பூஜையறை சுத்தம் செய்து ஒரு தீபமாவது ஏற்றி தங்களின் வாழ்வாதரத்தை மேம்படுத்திக்கொண்டு வருகின்றனர். வெள்ளிக்கிழமை என்பது ஒருவருக்கு செல்வவளத்தை தருவதில் முக்கியபங்கு வகிக்கின்றது.
வெள்ளிக்கிழமையை பிற மதத்தில் முக்கிய நாளாக எடுத்து வைத்திருந்தாலும் நம்ம ஆட்களும் இந்த நாளை கொண்டாடி வருகின்றனர். ஜாதககதம்பத்தில் பல இடத்தில் வெள்ளிக்கிழமையை நன்றாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்று சொல்லிருக்கிறேன்.
வெள்ளிக்கிழமை மதியம் என்பது மிக மிக முக்கியமான ஒரு நேரமாகவே கருதப்படுகின்றது. வெள்ளிக்கிழமை மதிய தொழுவது கூட முஸ்லீம் மக்களுக்கு முக்கியமாக ஒன்றாகவே கருதப்படுகின்றது. இந்த மதியத்திற்க்கு மேல் நேரத்தில் உங்களின் குலதெய்வத்தை நீங்கள் கும்பிட்டாலும் உங்களுக்கும் ஒரு நல்ல வாழ்க்கை என்பது அமையும்.
வெள்ளிக்கிழமை மதிய நேரத்தில் தைலக்குளியலைப்பற்றியும் நான் சொல்லிருக்கிறேன். உங்களால் முடிந்தளவுக்கு பூக்களை வாங்கிக்கொண்டு உங்களின் குலதெய்வத்திற்க்கு மற்றும் உங்களின் பூஜையறையில் வைத்து வணங்கினாலும் போதும் உங்களின் வாழ்க்கை நன்றாக இருக்கும்.
நாம் கோவிலுக்கு தான் செல்லவேண்டும் என்பதில்லை உங்களின் வீட்டை நீங்கள் சுத்தமாக வைத்திருந்து அதோடு உங்களின் பூஜையறையும் சுத்தமாக வைத்திருந்து நீங்கள் நல்ல எண்ணத்தோடு நீங்கள் பூஜை செய்தால் உங்களுக்கு அனைத்தும் கிடைக்கும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment