வணக்கம்!
இன்று காலையில் மன்னார்குடி இராஜாகோபாலனை தரிசனம் செய்ய சென்று இருந்தேன். மன்னார்குடி இராஜா கோபால சுவாமி எனக்கு மிகவும் பிடித்த ஒரு கோவில் என்பதால் அவ்வப்பொழுது அங்கு சென்று தரிசனம் செய்துவிட்டு வருவது உண்டு.
மன்னார்குடி செல்லும்பொழுது அங்குள்ள யானை என்னிடம் மிகவும் அன்பாக பழக ஆரம்பித்துவிட்டது. கொஞ்சநாளாக அது எனக்கு பழக்கம். மனிதனுக்கு தெரியுதோ இல்லையோ மிருகங்களுக்கு நம்மை நன்றாக தெரிந்துக்கொள்கின்றது.
மன்னார்குடி கோவிலில் இருக்கும் யானைக்கு என்னால் முடிந்ததை வாங்கி கொடுப்பது உண்டு. யானைக்கு இன்று இரண்டு தர்பூசணி பழங்களை வாங்கி கொடுத்தேன். ஒவ்வொரு தடவையும் ஏதாவது ஒன்றை வாங்கிக்கொடுப்பது உண்டு. வீட்டிலிருந்தும் காய்கறிகளையும் வாங்கிக்கொண்டு கொடுப்பேன்.
பாப் கட்டிங் செங்கமலம்
யானை பலத்தை நாம் பெறவேண்டும் என்றால் நாம் யானைக்கு பூஜை செய்யவேண்டும். யானைக்கு தேவையான உணவுகளையும் வாங்கிக்கொடுத்தாலும் அந்த பலத்தை நாம் பெறலாம். யானையை வீட்டில் வைத்து பராமரிப்பது இன்றைய காலத்தில் முடியாதவை. உங்களின் அருகில் இருக்கும் கோவில் யானைக்கு உங்களால் முடிந்ததை வாங்கிக்கொண்டு கொடுத்துக்கொண்டு வாருங்கள்.
யானையின் பலத்தை பெறவேண்டும் என்பதற்க்காக தான் மறைந்த முதல்வர் ஜெயலலிதா யானை முகாம் நடத்தினார். யானையின் பலத்தை பெறவேண்டும் என்பதற்க்காக இதனை செய்தார். நம்மால் முடிந்ததை நாம் செய்யலாம் என்று எண்ணி தான் இப்படிப்பட்ட விசயத்தை எளிமையாக செய்கிறோம்.
ஆன்மீகம் என்பது மிகவும் கடினமான ஒன்று தான். இதனை எல்லாம் செய்வதற்க்கு பொறுமை மற்றும் பணமும் தேவை. இதற்க்கு என்று நேரத்தை ஒதுக்கி செய்துக்கொண்டு தான் இருக்கிறேன். நான் செய்வதை அப்படியே உங்களிடம் சொல்லுகிறேன் முடிந்தால் பின்பற்றலாம்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment