வணக்கம்!
சனிக்கு ஒரு எளிமையான ஒரு பரிகாரத்தை நாம் பார்க்கலாம். ஒருவரின் ஜாதகத்தில் சனியால் பாதிப்படைந்து இருக்கின்றார் என்றால் அவர் ஒரு அடிமை வாழ்க்கை வாழ்வார். அனைத்திலும் அவர் தான் பயன்படுத்தப்படுவார் அவர்க்கு ஒன்றும் கிடைக்காது அவரால் பிறர் பயன்படுவார்கள்.
உண்மையில் நான் கூட இந்த மாதிரியான ஒரு வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறேன். இதற்கு என்னுடைய ஜாதகத்திலும் சனியின் நிலை சரியில்லை என்பது நான் அறிவேன். பெரும்பாலும் கிரகங்கள் எனக்கு அடிப்பட்ட காரணத்தால் தான் இதனை தீர்க்க என்ன வழி என்று யோசித்து ஆன்மீக பக்கம் வந்தேன்.
வாரம் தோறும் நல்லெண்ணெய் தேய்த்து குளித்து வந்தாலும் சனியின் சக்தி உங்களுக்கு கிடைக்கும். சனியின் பவர் இல்லாத காரணத்தால் தான் உங்களுக்கு பிரச்சினை வருகின்றது. சனியின் சக்தியை கிடைக்க ஒரு வழியை நாம் மேலும் பார்க்கலாம்.
எள் எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு கிண்ணத்தில் வைத்துக்கொண்டு அதனை பாதிப்படைந்த நபரை நிற்க வைத்து அவரை ஒன்பது முறை உங்களின் கையால் சுற்ற வேண்டும். அதனை எடுத்துக்கொண்டு உங்களின் வீட்டின் முன்புறம் உள்ள ரோட்டில் போட்டுவிடவேண்டும். இதனை ஒரு முறை செய்தால் பாேதும். சனியின் தோஷம் உங்களை விட்டு போகும்.
சனியால் பாதிப்படைந்த நபரின் தந்தை அல்லது தாய் வீட்டில் உள்ள நபர்கள் யாராக இருந்தால் இதனை பாதிப்படைந்த நபருக்கு செய்யலாம். இதனை செய்வதால் அவர்களுக்கு பாதிப்பு வராது.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment