Followers

Tuesday, March 12, 2019

புகழ் கிடைக்க என்ன வழி?


வணக்கம்!
         ஒரு மனிதன் நிறைய சம்பாதித்தாலும் அவன் புகழ் பெறுவது அவனின் சொந்த ஊரில் தான் புகழ் பெறுவான். நகரத்தில் பெரியளவில் சம்பாதித்தாலும் அது அவனின் சொந்த ஊருக்கு செல்லும்பொழுது தான் அது புகழ் பெறும்.

சொந்த ஊரில் ஒருவன் புகழ் பெறவேண்டும் என்றால் குரு கிரகம் மிகச்சிறப்பாக வேலை செய்யவேண்டும். குரு கிரகம் தன்னுடைய தசாவை சிறப்பாக செய்தால் அவன் புகழ் பெறுவான். எட்டு திசைக்கும் அவனின் புகழ் பரவும்.

குரு கிரகம் அல்லது ஒருவன் புகழ்பெறவேண்டும் என்றால் பூர்வபுண்ணியாதிபதி சிறப்பாக செயல்பட்டால் போதும் அவன் பெயரை வாங்கிவிடுவார். குப்பையில் இருந்தாலும் கோபுரத்தில் கொண்டு வந்து உட்காரவைத்துவிடும்.

குரு கிரகமும் சரியில்லை பூர்வபுண்ணியாதிபதியும் சரியில்லை என்றால் அவர் ஒரு குருவை நாடிச்சென்று அவர் வழியாக புகழ்பெறவேண்டும். ஜாதகத்தை மீறி அவரால் மட்டுமே உங்களுக்கு புகழை வாங்கி தரமுடியும்.

வெளியூர்களுக்கு சென்று சம்பாதியுங்கள். உங்களின் பலத்தை உங்களின் ஊரில் காண்பியுங்கள். உங்களின் சொந்த ஊரில் நீங்கள் காண்பிக்கும்பொழுது மட்டுமே நீங்கள் மிக சிறந்த ஒரு நிலையை எட்டியுள்ளீர்கள் என்ற அர்த்தம். பலரின் வாழ்வில் நான் பார்த்து தெரிந்துக்கொண்ட விசயத்தை உங்களுக்கு சொல்லுகிறேன். இதனை கடைபிடித்தால் சிறந்த விளங்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: