வணக்கம்!
ரிஷபஇராசியைப்பற்றி எழுதியவுடன் பல நண்பர்கள் தொடர்புக்கொண்டு என்ன இப்படி சொல்லிவிட்டீர்கள் அதே நேரத்தில் அப்படி தான் என்னுடைய வாழ்க்கையும் இருக்கின்றது. இதற்கு பரிகாரத்தையும் சொல்லுங்கள் என்று சொன்னார்கள்.
பரிகாரம் என்பது உங்களின் இராசிநாதனை குளிர்ப்பது மட்டுமே பரிகாரமாக செய்யவேண்டும். சுக்கிரனுக்கு வெள்ளிக்கிழமை தோறும் ஒரு விளக்கு ஏற்றி வழிபடவேண்டும். கொஞ்சம் அதிகமாக செலவு செய்து பரிகாரம் செய்யவேண்டும் என்றால் ஒரு விளக்கோடு ஒரு அர்ச்சனையும் உங்களின் பெயர்க்கு செய்துக்கொள்ளுங்கள்.
ஜாதககதம்பத்தில் இத்தனை வருடங்கள் எழுதிக்கொண்டு இருப்பதில் ஒரு முக்கிய கருத்தை சொல்லிக்கொண்டே வருவேன் அந்த கருத்தை நாம் நல்ல உள்வாங்கி செயல்பட்டாலே போதுமானது. அதாவது ஒரு குணம் உங்களுக்கு வருகின்றது என்றால் அந்த குணத்தை உருவாக்குவதில் முக்கியபங்கு வகிப்பது உங்களின் ஜாதகத்தில் உள்ள கிரகங்கள் தான் அப்படி உருவாக்கிக்கொண்டு இருக்கின்றது.
உங்களின் ஜாதகத்தில் உள்ள கிரகங்கள் உங்களை ஒரு பகடை காயாக பயன்படுத்தி வெளிப்படுத்திக்கொண்டு இருக்கின்றது. ஒரு ஆன்மீகவாதியாக இருந்துக்கொண்டு நீங்கள் கிரகத்திற்க்குள்ளான குணத்தில் மாட்டிக்கொள்ளகூடாது அதனை மீறி நீங்கள் செயல்படவேண்டும்.
ஒவ்வொரு இராசியும் அந்தந்த குணத்தை வெளிப்படுத்திக்கொண்டே இருக்கும் இதனை மீறி அந்த குணத்தை நீங்கள் வெளிப்படுத்திக்கொண்டு இருக்ககூடாது என்பதை மட்டும் மனதில் வையுங்கள். நீங்கள் அனைவரும் ஆன்மீகவாதி என்பதை நான் அறிவேன் அதனால் இந்த குணம் நம்ம இராசியில் இருந்து வருகின்றது என்பதை அறந்து அதனை தவிர்த்துவிட்டு ஆன்மீகவாதியாக இருங்கள் என்பதை மட்டும் உங்களிடம் சொல்லுகிறேன்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment