வணக்கம்!
நேற்று இரண்டாம் வீட்டைப்பற்றி பார்த்தோம். அதன் தொடர்ச்சி தான் இந்த பதிவும். இரண்டாம் வீட்டிற்க்கு லட்சுமி கடாட்சம் எப்படி கிடைக்கிறது என்பதைப்பற்றி பார்க்கும்பொழுது எட்டாவது வீட்டு அதிபதியும் அந்த வேலையை செய்கிறது என்று பார்த்தோம்.
முதலில் எட்டாவது வீட்டில் அமரும் கிரகம் தன் பார்வையை இரண்டாவது வீட்டிற்க்கு செலுத்துகிறது. எட்டாவது வீட்டில் சுக்கிரன் அமர்ந்தால் முதல் தரமான ஒரு லட்சுமி கடாட்சம் இருக்கின்றது என்று சொல்லுகின்றார்கள்.
அனுபவத்தில் கூட நான் நிறைய பார்த்து இருக்கிறேன். அதாவது சுக்கிரன் எட்டில் இருக்கும் நபர்களுக்கு எப்படியாவது பணம் வந்துக்கொண்டே இருக்கின்றது என்று சொல்லலாம்.
அதேப்போல் ஒரு சில பணக்காரர்களுக்கு எட்டாவது வீட்டில் குரு கிரகம் அமர்ந்து இருக்கின்றதை நான் பார்த்து இருக்கிறேன். பொதுவாக எட்டாவது வீட்டில் குரு கிரகம் அமர்ந்தால் நல்லதல்ல என்று சொல்லுகின்றார்கள் ஆனால் ஒரு சிலருக்கு நல்ல பணத்தையும் கொடுக்கிறது.
என்னுடைய அனுபவத்தில் நான் பார்த்த ஜாதகத்தில் எல்லாம் எந்த அதிபதியும் எட்டாவது வீட்டில் அமர்ந்தால் எப்படியும் பணம் கொடுக்கிறது. பணம் வரவில்லை என்று சொல்லுபவர்கள் இருக்க செய்வார்கள்.
கொஞ்ச காலம் எடுத்து பணத்தை கொடுக்கலாம் ஆனால் பணம் கொடுக்கும். எட்டாவது வீட்டில் ஒரு கிரகம் மட்டும் அமர்ந்தால் பெரும்பாலும் பணம் கிடைத்துவிடுகிறது. கொஞ்ச காலம் எடுத்துக்கொண்டு கொடுக்கலாம்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment