Followers

Friday, October 7, 2016

எப்பொழுது பலன் கொடுக்கும்?


ணக்கம்!
          ஒருவரின் ஜாதகத்தில் பலன் ஒன்று கொடுக்கவேண்டும் என்றால் அது லாபஸ்தானம் வேவை செய்யவேண்டும் என்பது மட்டும் இல்லை. பூர்வபுண்ணியமும் பாக்கியஸ்தானமும் எப்பொழுது வலு பெறுகிறதோ அப்பொழுது தான் நமக்கு பலன் கிடைக்கும்.

பூர்வபுண்ணியாதிபதி மற்றும் பாக்கியஸ்தான அதிபதியும் ஒன்றாக சேர்ந்து பலன் பெறவேண்டும். இரண்டும் ஒன்றாக சேர்ந்து பலனை கொடுப்பதற்க்கு கொஞ்ச கஷ்டப்பட்டு வேலை செய்யவேண்டும். பலருக்கு ஏதாவது ஒன்று மட்டும் வேலை செய்து கையில் கிடைத்தது அதோடு பறிபோய்விடும்.

இரண்டும் ஒன்றாக சேர்ந்து பலனை தரும்பொழுது அது நமக்கு கிடைத்துவிடும். பூர்வபுண்ணியாதிபதிக்கு குலதெய்வம் பலனை தரவேண்டும். பாக்கியஸ்தானஅதிபதிக்கு நமது ஆன்மீக வழியில் செய்த வேலைகள் எல்லாம் பலனை தரவேண்டும். இது இரண்டும் இருந்தால் பூர்வபுண்ணியாதிபதி மற்றும் பாக்கியஸ்தானஅதிபதி வேலை செய்து நமக்கு பலனை கொடுத்துவிடும்.

நான் பார்த்தவரையில் பெரிய பணக்காரர்கள் அனைவரும் இந்த வழியை மிக சரியாக தெரிந்துக்கொண்டு இந்த வழியை மேற்க்கொண்டு அனைத்தையும் சாதித்துவிட்டு மேலே சென்றுக்கொண்டு இருக்கின்றனர். நீங்களும் இதனை செய்து மேலே செல்லுங்கள்.

இன்று ஈரோடு பயணம். திருப்பூர் ஈரோடு மற்றும் சேலத்தில் உள்ளவர்கள் சந்திப்பதாக இருந்தால் தொடர்புக்கொள்ளவும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு


No comments: