Followers

Tuesday, October 18, 2016

செவ்வாய் தசா பிரச்சினை


வணக்கம்!
          ஒருவருக்கு செவ்வாய் தசா நடக்க ஆரம்பித்தால் அவர் திருமணம் செய்து திருந்தால் அவருக்கும் அவரின் துணைக்கும் சண்டை ஆரம்பித்துவிடும். இருவரும் நன்றாக வாழ்ந்துக்கொண்டு இருந்திருப்பார்கள். சந்தோஷமாக போய்க்கொண்டுருந்த வாழ்க்கையில் செவ்வாய் தசா ஆரம்பித்தவுடன் இருவருக்கும் சண்டையை உருவாகிவிடும்.

செவ்வாய் கிரகத்திடம் எப்பொழுதும் கொஞ்சம் உஷாராக இருக்கவேண்டும். கொஞ்சம் கவனகுறைவு ஏற்பட்டாலும் அதன் விளைவு அதிகமாக இருக்கும். பொதுவாக என்னிடம் பூஜை செய்வர்களின் ஜாதகம் அத்துபடியாக எனக்கு ஞாபகம் இருக்கும். இவர்களுக்கு வருகின்ற நல்லது கெட்டது எல்லாம் தெரியும். 

ஒருத்தருக்கு தசா சரியில்லை என்றால் உடனே நான் அவர்களுக்கு போன் செய்து உங்களுக்கு செவ்வாய் தசா ஆரம்பம் ஆகிறது பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிடுவது உண்டு. நம் ஆட்கள் நினைப்பு எல்லாம் இவனுக்கு வேலை இல்லை எதையாவது சொல்லிக்கொண்டு இருப்பான் என்று விட்டுவிடுவார்கள். கொஞ்சநாளில் பார்த்தால் அங்கு சண்டை சச்சரவு நடக்க ஆரம்பித்துவிடும்.

ஒரு சோதிடனின் பார்வை என்பது கிரகம் இது செய்யும் என்பது துல்லியமாக தெரியும். அதனை முன்கூட்டியே சொல்லிவிட்டால் எச்சரிக்கையாக இருப்பார்கள் என்று சொல்லுவது உண்டு ஆனால் மக்களின் எண்ணம் சரியாக இல்லை என்பது தான் உண்மை. சரி இதனை விடுவோம் மேட்டருக்கு வருவோம்.

செவ்வாய் தசா சுயபுத்தி அதாவது செவ்வாய் தசா செவ்வாய் புத்தியில் அதிகமான சண்டையை சச்சரவை கணவன் மனைவிக்குள் உருவாக்கிவிடுவார். இதனை புரிந்துக்கொண்டு நீங்கள் வாழலாம் அல்லது அருகில் இருக்கும் முருகன் கோவிலுக்கு சென்று செவ்வாய் தசா முடியும் வரை அப்படி இல்லை என்றாலும் செவ்வாய் தசா செவ்வாய் புத்தி முடியும்வரை தீபம் ஏற்றி வழிபட்டு வரலாம்.

எனக்கு தெரிந்த ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய் பனிரெண்டாவது வீட்டில் இருந்தது. அவர்க்கு செவ்வாய் தசா ஆரம்பம் ஆனது நான் அவரிடம் இரண்டை சொன்னேன். ஒன்று மர்ம விலங்கு தாக்ககூடும் அல்லது உங்களின் வீட்டில் திருடன் புகுந்து ஏதாவது திருடிவிட்டு சென்றுவிடுவான் என்று சொல்லிருந்தேன்.

அவர்க்கு வீட்டில் அவருக்கு ஒரு நாள் கதண்டு என்ற ஒரு வண்டு கடித்து மருத்துவமனைக்கு செல்ல நேரிட்டது. கொஞ்ச நாளில் அவரின் வீட்டில் இருந்து தண்ணீர் இறைக்கும் மோட்டாரை திருடன் திருட்டிவிட்டு சென்றுவிட்டான்.

செவ்வாய் தசா என்றாலும் பெரிய அளவில் எல்லாம் பயப்படதேவையில்லை அருகில் கண்டிப்பாக ஒரு முருகன் கோவில் இருக்கும் அங்கு வாரத்திற்க்கு ஒரு முறை சென்று வழிபட்டு வந்தாலே போதும். நம் ஆட்களுக்கு இருக்கும் பிஸியில் அவ்வளவு எளிதில் எல்லாம் நல்ல விசயத்தை செய்யாமாட்டான் அல்லவா. செய்தால் நல்லது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: