வணக்கம்!
நண்பர் ஒருவர் கேள்வி கேட்ருந்தார். லாபஸ்தானஅதிபதி வேலை செய்வதற்க்கே பூர்வபுண்ணியாதிபதியும் பாக்கியஸ்தான அதிபதியும் இணைந்து பலனை கொடுத்தால் தான் வேலை செய்யும் என்று சொல்லியுள்ளீர்களே எப்படி என்று புரியவில்லை என்றார்.
நான் பதிவில் சொல்லுவது எளிதாக நீங்களே செய்துக்கொள்ளகூடிய ஒரு எளிமையான வழியை சொல்லுவோம். இதனை எல்லாம் நீங்கள் செய்துக்கொண்டு முன்னேற்றம் அடைந்தால் உண்டு அப்படி இல்லை என்றால் நீங்கள் ஒரு சோதிடரை அணுகி தான் இதனை செய்யமுடியும்.
குலதெய்வம் தெரிந்தால் உங்களின் பூர்வபுண்ணியத்தை பலப்படுத்தமுடியும். உங்களுக்கு குலதெய்வம் தெரியவில்லை என்றால் வேறு வழியை கையாளவேண்டும்.
பாக்கியஸ்தான அதிபதி வேலை செய்யவேண்டும் என்றால் ஆன்மீக வழியில் உள்ள விசயத்தை நீங்கள் எடுத்து செய்யும்பொழுது உங்களுக்கு இது வேலை செய்யும்.
சோதிடம் படித்த அனைவருக்கும் தெரிந்த ஒன்று பூர்வபுண்ணியாதிபதியும் பாக்கியஸ்தானஅதிபதியும் வேலை செய்தால் தான் சோதிடத்தில் பலன் கிடைக்கும் என்று தெரியும்.
என்னிடம் ஒருவர் சோதிடம் பார்க்க வந்தால் பெரும்பாலும் நான் பலனை சொல்லி எளிமையான ஒரு பரிகாரத்தை செய்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிடுவேன். ஒரு சாதாரண நபருக்கு இது பொருந்தும்.
இன்றைய தேதியில் நான் வெளியில் சுற்றிக்கொண்டு தான் இருக்கிறேன். அதிகபயணம் செய்து பல ஊர்களுக்கு சென்றுக்கொண்டு இருக்கிறேன். சோதிடம் பார்க்க நான் வாங்கும் பணம் 250 ரூபாய். இன்றைய விலைவாசியில் இது எனக்கு கட்டுபடியாகாத ஒரு பணம்.
பெரும்பாலும் நான் சம்பாதிப்பது பணக்காரர்களை வைத்து தான் சம்பாதிக்கிறேன். ஒரு தொழில் செய்பவர் அல்லது பணக்காரர்கள் வரும்பொழுது பலனை எல்லாம் கேட்பதில்லை வந்தவுடன் இது என்னுடைய தேவை எனக்கு என்ன செய்தால் நடக்கும் என்று கேட்பார்கள்.
தற்பொழுது வரும் நபர்கள் இது என்னுடைய குடும்ப ஜாதகம் இந்த வருடத்திற்க்கு இவ்வளவு பணம் தருகிறேன் என்று கொடுத்துவிட்டு நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள் என்று சென்றுவிடுகிறார்கள். அவர்களுக்கு தேவையானதை நான் செய்துக்கொடுத்துக்கொண்டு இருக்கிறேன்.
இன்றைக்கு இருக்கும் தொழிலும் சரி பணக்காரர்களும் சரி ஆன்மீகவாதிகள் இல்லாமல் இல்லை என்பது தான் உண்மையான ஒரு விசயம். புரிந்துக்கொண்டவர்கள் பிழைத்துக்கொள்கிறார்கள்.
நீங்கள் எல்லாம் இதனை தான் செய்யவேண்டும் என்பதில்லை உங்களுக்கு முடிந்த எளிதான பரிகாரத்தை செய்யுங்கள். அதில் வெற்றி கிடைத்தாலும் சரி அடுத்த லெவல் செல்லவேண்டும் என்ற நிலை வரும்பொழுது என்னை தொடர்புக்கொள்ளலாம்.
என்னை தான் நீங்கள் தொடர்புக்கொள்ளவேண்டும் என்பதில்லை உங்களின் அருகில் இருக்கும் சோதிடர்கள் அல்லது ஆன்மீகசம்பந்தப்பட்ட வேலையில் இருக்கும் நபர்களை தொடர்புக்கொண்டு கேட்டால் அவர்கள் செய்துக்கொடுப்பார்கள்.
ஒரு ஜாதகத்தில் பூர்வபுண்ணியமும் பாக்கியஸ்தானஅதிபதியும் அதாவது அந்த இடங்கள் மிக மிக முக்கியமான ஒன்று. இது இரண்டும் சரியில்லை என்றால் ஒருவரால் நல்ல வாழ்க்கை வாழவே முடியாது.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment