Followers

Thursday, October 13, 2016

குரு பரிகாரம்


ணக்கம்!
          ஒவ்வொருவருக்கும் தசா நடக்கும் காலத்திற்க்கு தகுந்தவாறு அவர்களின் உணவு முறை வித்தியாசப்படும். அந்த தசாவிற்க்கு தகுந்தவாறு உணவை விரும்பி உண்ணுவார்கள். குரு தசா நடக்கும் ஜாதகர்கள் பெரும்பாலும் பிராமணர்கள் உண்ணும் உணவை விரும்பி உண்ணுவார்கள்.

வியாழக்கிழமை தோறும் ஒரு நேரத்திற்க்கு மட்டும் நீங்கள் புளியோதரை செய்து சாப்பிடுங்கள். புளியோதரை செய்து சாப்பிட்டால் உங்களுக்கு குரு கிரகத்தின் அருள் கிடைக்கும். அதாவது புளியோதரை சாப்பிடும்பொழுது நீங்களும் ஒரு பிராமணர் போல் கருதப்படுவதால் குருவின் அருள் கிடைக்கும்.  

வியாழக்கிழமை அன்று நன்றாக புளியோதரை செய்யுங்கள். புளியோதரை பிராமணர்களின் வீடுகளில் செய்வது போல் செய்யவேண்டும். புளியோதரைக்கு பெரும்பாலும் பழைய புளியை உபயோகித்து செய்வார்கள். புதிய புளியில் அதிக வீரியம் இருக்கும் அதனால் பழைய புளியை பயன்படுத்துலாம்.

புளி சீரகம் பெருங்காயம் இது அடிப்படை உங்களுக்கு தேவையான பிற பொருட்களையும் கொண்டு நன்றாக செய்து சாப்பிடலாம். குருவின் காரத்துவதற்க்கு உள்ள பொருட்கள் என்று வரும்பொழுது இது அடிப்படை என்பதால் சொல்லுகிறேன்.

தயிர் சாதம் புளிசாதம் இரண்டையும் நன்றாக செய்து சாப்பிட்டால் அது குருவின் காரத்துவத்தோடு உங்களுக்கு நல்ல பலனை கொடுக்கும். இதனை எல்லாம் யார் செய்வார்கள் என்று விட்டுவிடாமல் ஒவ்வொன்றாக செய்து வந்தால் தான் கொஞ்ச நாளில் நல்ல முன்னேற்றம் காணலாம். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: