வணக்கம்!
பண்டிகை காலம் நெருங்கி வருகின்றது. பண்டிகை காலத்திற்க்கு தேவையான ஒரு செயலை வருடம் தோறும் செய்ய சொல்லுவது உண்டு. தீபாவளிக்கு முன்பே நீங்கள் தான தர்மம் செய்துவிடுங்கள்.
தீபாவளி கொண்டாட முடியாத ஏழை மக்களுக்கு உங்களால் முடிந்தளவு ஏதோ ஒரு உதவியை செய்துவிடுங்கள். வருடந்தோறும் உங்களிடம் நான் சொல்லிக்கொண்டு வருகிறேன். பல நண்பர்கள் இதனை செய்வது தெரிந்த காரணத்தால் இந்த வருடமும் இதனை சொல்லிவிட்டால் நீங்கள் செய்துவிடுவீர்கள் என்பதால் இதனை செய்ய சொல்லுகிறேன்.
துணிகளை எடுத்து முன்பே கொடுத்துவிடுங்கள் அல்லது தீபாவளிக்கு உங்களுக்கு நான் துணி வாங்கி தருகிறேன் என்று சொல்லிவிட்டு அந்த நேரத்தில் வாங்கிக்கொடுத்துவிடுவிங்கள். தற்பொழுது நீங்கள் சொல்லிவிட்டால் அவர்கள் தேவையில்லாமல் கடன் வாங்கமாட்டார்கள் அல்லவா.
பணஉதவியும் செய்வதாக இருந்தால் தாராளமாக செய்யலாம். அவர்கள் விருப்பட்ட ஒன்றை அவர்கள் வாங்கிக்கொள்வார்கள் அல்லவா. அவர்கள் எப்படி செலவு செய்கின்றார்கள் என்பது முக்கியம் இல்லை நாம் உதவி செய்வது தான் முக்கியம்.
நாளை அம்மன் பூஜை.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment