வணக்கம்!
சந்திரன் எதனோடு இணைக்கின்றதோ அந்த கிரகத்தின் சாரம் உடையவர்கள் தான் உங்களோடு அதிகம் பழகுவார்கள். உங்களின் மனமும் அவர்களை தான் ஏற்றுக்கொள்ளும்.
சந்திரன் சனியோடு இணைகின்றது என்று வைத்துக்கொள்வோம் அவர்கள் தாழ்த்தப்பட்டவர்களோடு நட்பு கொண்டாடுவார்கள். சந்திரன் குருவோடு இணையும்பொழுது உயர்வகுப்போடு உள்ளவர்களோடு இணைவார்கள்.
நமது மனது எதனோடு இணைகின்றதோ அதனை தான் விரும்பும். இது நட்புக்கு என்பதோடு மட்டும் அல்லாமல் அதற்கு மேல் சென்று திருமணபந்தம் கூட அப்படி தான் செய்வார்கள். எந்த கிரகத்தோடு இணைகின்றதோ அந்த கிரகத்தின் காரத்துவத்தோடு அவர்கள் இணைவார்கள் என்பது தெரிந்துக்கொள்ளுங்கள்.
சந்திரன் மறைவு ஸ்தானத்தில் அமரும் ஜாதகர்கள் எல்லாம் பார்த்தால் இல்லாத வில்லங்கத்தை எல்லாம் செய்பவர்களாக இருப்பார்கள். சிந்தனை செய்வதே வில்லங்கமாக தான் இருக்கும்.
மறைவு ஸ்தானத்திற்க்கு சந்திரன் செல்வது அந்தளவுக்கு உத்தமம் இல்லை. ஏன் என்றால் ஒரு சிலர் வில்லங்கத்தை செய்து ஜெயிலுக்கு செல்வதும் உண்டு.
உங்கள் ஜாதகத்தில் சந்திரன் நிலை வைத்தே நீங்கள் யார் நீங்கள் என்ன செய்வீர்கள் என்பதை தெரிந்துக்கொள்ள முடியும். நமக்கு சந்திரன் இப்படி இருக்கின்றது நாம் மாற்றிக்கொள்ளவேண்டும் என்பதை அறிந்து மாற்றிக்கொள்ளுங்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment