வணக்கம்!
புதன் தோஷ நீங்க மரகதலிங்கத்தை வணங்கினால் நல்லது என்று முன்னோர்கள் சொல்லியுள்ளார்கள். மரகதலிங்கம் பச்சை நிறத்தில் இருக்கும் புதனுக்குரிய நிறம் பச்சை என்பதால் மரகதலிங்கத்தை வணங்குவது நல்லது என்பார்கள்.
புதன் வழியாக உங்களுக்கு பிரச்சினை வருகின்றது என்று நினைத்தால் அல்லது புதன் தசா நடந்தால் இதனை நீங்கள் செய்யலாம். புதன் கிரகம் நமது அறிவுக்குரிய கிரகம் என்பதால் அனைவரும் ஒரு முறையாவது வணங்குவது சிறப்பு என்பார்கள்.
மரகதலிங்கத்தை நான் வணங்கியது கிடையாது. பிறர் சொல்லி தான் கேள்விபட்டு இருக்கிறேன். நீங்கள் புதன் என்றவுடன் பெருமாளை வணங்கவேண்டும் என்பார்கள். அனைத்து கிரகத்தையும் தன்னிடம் வைத்திருக்கும் சிவனை வணங்கினால் பெருமாளை வணங்குவதை விட சிறப்பு என்பதால் இதனை சொல்லுகிறேன்.
இன்றைய காலத்தில் மரகதலிங்கம் என்பது இருக்கின்றதா என்பதே தெரியவில்லை நம்ம ஆட்களுக்கு இந்த உலகத்தை கொடுத்தாலே பற்றாது. இதனை எல்லாம் விட்டு வைத்திருப்பார்களா என்பது சந்தேகமாக இருக்கின்றது. உண்மையில் இருந்தால் வணங்குங்கள்.
புதன் கிரகம் எப்படி எல்லாம் பிரச்சினை கொடுக்கும் என்பதை வரும் பதிவில் நாம் பார்க்கலாம். புதன்கிரகம் உங்களின் ஜாதகத்தில் எப்படி இருக்கின்றது என்பதை கொஞ்சம் உங்களின் ஜாதகத்தை எடுத்து பாருங்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment