வணக்கம்!
நேற்று சுவாமிமலை சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு அதோடு நமது சூரசம்ஹார பரிகாரத்திற்க்கு அன்னதானம் செய்வதற்க்கு என்று பணம் செலுத்தினேன்.
செவ்வாய் பரிகாரத்திற்க்கு வரும் நண்பர்கள் அளிக்கும் பணத்தை முடிந்தவரை தெரிந்த முருகன் கோவிலில் செலுத்தி ஏதாே ஒரு நல்ல காரியம் நடக்க இதனை செய்கிறேன் என்று சொல்லிருந்தேன். அதன் ஆரம்பமாக நேற்று சுவாமிமலை சென்று காணிக்கையை செலுத்திவிட்டேன். அதன் விபரத்தை இணைத்துள்ளேன்.
பணம் எனக்கு தான் வருகின்றது ஆனாலும் அந்த பணம் தகுந்த முருகன் கோவிலுக்கு செல்லவேண்டும் என்பதால் இதனை செய்துக்கொண்டு வருகிறேன். ஒரு சில முருகன் கோவிலில் பணம் செலுத்தும்பொழுது ரசீதை வாங்கமுடியாது ஏன் என்றால் அது சிறிய கோவிலாக இருக்கும்.
ஒவ்வொரு கோவிலாக நமது நண்பர்கள் வழியாகவும் என்னுடைய வழியாகவும் பணம் செலுத்தப்படும்.நம்மால் முடிந்தவரை ஒரு நிகழ்வு நடைபெறவேண்டும் என்பதால் இதனை செலுத்தப்படுகிறது. எனது பூஜையும் உண்டு.
செவ்வாய் பரிகாரத்திற்க்கு இதுவரை பணம் செலுத்தாமல் இருக்கும் நண்பர்கள் உடனே செலுத்திவிடுங்கள். ஜாதகத்தையும் இணைத்துவிடுங்கள். தங்களின் வேண்டுகோளும் எழுதி அனுப்புவது நல்லது.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment