வணக்கம்!
ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரன் ஆறாவது வீட்டில் இருந்தது. சுக்கிரனோடு சூரியன் இணைந்து அமர்ந்தது. ஏழாவது வீடு சனியின் வீடாக இருந்தது. நான் அவருக்கு சோதிடம் பார்க்கும்பொழுது ஏழாவது வீடாக சனியின் வீடு இருந்ததால் அவருக்கு வரும் பெண் படித்திருக்காது என்று சொல்லிருந்தேன்.
அவர் திருமணத்திற்க்கு பெண் பார்க்கும்பொழுது அனைவரிடமும் அவர் பெண் படித்திருந்தாலும் சரி படிக்காமல் இருந்தாலும் சரி எந்த பெண்ணாக இருந்தாலும் இருக்கட்டும் என்று பெண் பார்க்க சொன்னார்.
அவருக்கு அமைந்த பெண் அரசாங்க உத்தியோகத்தில் இருக்கும் பெண்ணாக அமைந்தது. அவர் பார்த்த நேரத்தில் நம்ம சோதிடஅறிவு அந்தளவுக்கு தான் இருந்தது என்று சொல்லவேண்டும்.
திருமணத்திற்க்கு நாம் சோதிடம் பார்க்கும்பொழுது சுக்கிரனின் நிலையை நன்கு கவனித்து பலனை சொல்லவேண்டும் அதோடு சுக்கிரனை முதலாவதாக நாம் எடுத்துக்கொண்டு அதன் பிறகு ஏழாவது வீட்டிற்க்கு முக்கியத்துவம் கொடுத்து பலனை பார்த்தால் நன்றாக இருக்கும்.
சுக்கிரனோடு சூரியன் இணைந்ததால் அவருக்கு அப்படிப்பட்ட திருமண வாழ்வு கிடைத்தது. அது எந்த வீட்டில் அமைந்தாலும் சரி அதனை தான் தரும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment