வணக்கம்!
சுக்கிரனை பற்றி கொஞ்சம் பார்க்கலாம். ஒருவருக்கு சுக்கிரதசா ஆரம்பித்தால் அவரை நாம் கையில் பிடிக்கமுடியாது அந்தளவுக்கு செல்வவளத்தோடு திகழ்வார் என்று நாம் சொல்லலாம்.
சுக்கிரன் தசாவில் பலருக்கு தொடர் நன்மை வந்தாலும் இடையில் வரும் ஒரு சில புத்திகள் அவரை போட்டு தாக்கவும் செய்யும். சுக்கிரன் தசாவில் முதலில் நன்றாக இருந்து பிறகு கஷ்டபட்டவர்கள் இருக்கின்றார்கள்.
சுக்கிரன் தசாவில் சனி புத்தி ஒருவருக்கு வருகின்றது என்று வைத்துக்கொள்வோம். ஒரு சிலர் மிகுந்த கஷ்டத்தை இந்த காலத்தில் பெற்று இருக்கின்றனர். சுக்கிரனுக்கு சனி எக்கு தப்பாக அமைவதால் அப்படி நடைபெறும் அல்லது சனி கெடுதல் தரும் நிலையில் ஜாதகத்தில் இருந்தால் அப்படி இருக்கும்.
சுக்கிரன் தசாவில் குரு புத்தி நடைபெற்றாலும் கெட்ட பலனை கொடுக்கும் தன்மையில் இருக்கும். இரண்டுக்கும் சரிப்பட்டு வராதா காரணத்தால் அப்படிப்பட்ட பலனை கொடுக்கலாம்.
ஒருவருக்கு சுக்கிரன் தசா நடைபெற்றால் உடனே நல்லது மட்டும் தரும் என்று நினைக்காமல் சுக்கிரன் தசா முழுவதும் நல்லதை பெறுவதற்க்கு என்ன வழி என்று யோசித்தால் கண்டிப்பாக அனைத்து புத்தியிலும் நல்லதை பெறலாம்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment