வணக்கம்!
ஒருவரின் ஜாதகத்தில் சந்திரனுக்கு குருவின் பார்வையும் சனியின் பார்வையும் கிடைக்கும்பொழுது என்ன மாதிரியான பலன் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.
மனகாரனுக்கு நல்ல பார்வையும் கெட்ட பார்வையும் கிடைக்கும்பொழுது அரைபையித்தம் போல இருக்க வாய்ப்பு உள்ளது. அது என்னங்க அரை பயித்தியம் என்று கேட்கலாம். இரண்டாம் கெட்டான் என்று கிராமத்தில் சொல்லவார்கள் அல்லவா அதுபோல இருக்க வாய்ப்புள்ளது.
சனிக்கிரகத்தின் பார்வைபடும்பொழுது வாழ்வில் அதிக பிரச்சினையை சந்திக்க நேரிடும். எங்கு போனாலும் பிரச்சினை என்பது அவர்களை தேடிபோய் முன்னாடி இருப்பது போலவே இருக்கும்.
சனிக்கிரகத்திற்க்கு சந்திரன் பார்வைபடும்பொழுது அவர்களை சுற்றி ஒரு சந்தேக பேச்சு ஓடிக்கொண்டு இருக்கும். அவர்கள் அதனை செய்தார்கள் இதனை செய்தார்கள் என்று அவர்கள் சம்பந்தமே படாமல் அவர்களை பற்றி பிறர் சொல்லிக்கொண்டு இருப்பார்கள். இது கிராமபுறங்களில் நடக்ககூடிய ஒன்று.
குருகிரகத்தின் பார்வைபடும்பொழுது குரு சந்திரமங்கலயோகம் வேலை செய்து நல்ல பணத்தை கொடுக்கும். குருவின் பார்வை மற்றும் சனியின் பார்வை படுவதால் அந்த பணம் பல வழிகளிலும் வெளியே சென்று செலவு செய்யவைக்கும்.
குரு பார்வை சந்திரனுக்கு இருப்பதால் அவர்கள் பெரும்பாலும் ஆன்மீக சம்பந்தப்ட்டதில் அதிக நாட்டம் உடையவர்களாக இருப்பார்கள். ஆன்மீகவாதிகளின் தொடர்பு இருக்கும்.
சந்திரனுக்கு சனி மற்றும் குருவின் பார்வை நல்லதல்ல. நல்லதும் கெட்டதும் அடிக்கடி மாறிமாறி வருவதால் வாழ்க்கையில் நிறைய அனுபவம் கிடைக்கும்.இதற்கு பரிகாரம் உங்களின் குலதெய்வத்தை வணங்குங்கள் அல்லது உங்களின் சோதிடரை வைத்து பரிகாரம் செய்துக்கொள்ளுங்கள்..
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
2 comments:
பல அற்புத கருத்துக்களை தாங்கள் பதிவதற்கு நன்றி , குறிப்பாக உபய லக்கினம் மிதுனம் மற்றும் கன்னிகு குரு பாதகாதிபதி , இந்த ராசிக்கு அல்லது லக்கினத்திற்கு குரு பார்வை இருந்தால் போராட்டம் தான் இவர்களுக்கு சனி பாக்கியாதிபதி/பூர்வ புண்ணிய அதிபதி ஆகிறார், நான் மிதுன லக்கினம் தற்பொழுது குரு திசை நடக்கிறது இன்னும் ஒரு வருடம் திசை முடிய இருக்கிறது பல்லை கடித்து கொண்டு இருக்கிறேன் எப்படா முடியும் என்று , நீங்கள் சனி பகவானுக்கு சொன்னது போன்ற பலன் நடக்கிறது உபய லக்கினம் ராசி கொண்டவர்களுக்கு குரு பார்வை அவ்வளவு சிறப்பு இல்லை எனினும் தங்களின் பதிவுகள் அனைத்தும் மிக அருமை
நன்றி
ரவி
வணக்கம்
தங்களின் கருத்துக்கு நன்றி.
நன்றி
Post a Comment