Followers

Sunday, October 16, 2016

லட்சுமி கடாட்சம் மனிதனுக்கு தேவை


ணக்கம்!
          வேசி தொழில் செய்தால் கூட அதற்கு முகராசி வேணும் என்று ஒரு பழமொழி சொல்வார்கள். இது தான் உண்மை. நீங்கள் எந்த தொழில் செய்தாலும் உனக்கு என்று ஒரு முகராசி அதாவது லட்சுமி கடாட்சம் என்று சொல்லுவார்கள் அல்லவா அது இருக்கவேண்டும் இல்லை என்றால் நீங்கள் என்ன தான் செய்தாலும் முன்னேற்றம் காணமுடியாது.

பல பேர்கள் பீடை பிடித்தது போல தான் இருக்கின்றார்கள். கஷ்டகாலம் வரும் போகும் ஆனால் நம்மிடம் கஷ்டம் இருக்கின்றது என்பதை மட்டும் காட்டிக்கொள்ளாதீர்கள். கஷ்டம் இருப்பதை வெளிக்காட்டிக்கொண்டு இருந்தால் இருக்கின்ற கஷ்டம் கூட தான் செய்யும்.

கோவிலுக்கு செல்லும்பொழுது நம்ம ஆட்கள் நிறைய நகைகளை போட்டுக்கொண்டு செல்லுவது எல்லாம் இது போல் எனக்கு நிறைய கொடுக்கும் என்ற நம்பிக்கையில் தான் அப்படி சென்றார்கள். உங்களிடம் என்ன இருக்கின்றதோ அதனை தான் திரும்ப திரும்ப கொடுக்கும் தன்மையில் தான் கோவில்கள் கட்டப்பட்டு இருக்கின்றன.

சோகமாக இருப்பது போல் வாழ்க்கின்ற காலகட்டம் எல்லாம் இருக்கின்றது. தீயகிரகங்கள் கடுமையாக தாக்கும் காலத்தில் ஒரு நாளில் ஒரு அரைமணிநேரம் அப்படி இருக்கலாம் ஆனால் நாள் முழுவதும் அப்படி கிடையாது. அரைமணி நேரம் அப்படி இருக்கலாம். எந்த ஒரு காரணம் கொண்டும் பீடையோடு இருக்ககூடாது.

உங்களிடம் இன்று இல்லை என்றாலும் பரவாயில்லை. நிறைய கோவில்களுக்கு சென்று அங்குள்ள புனித தீர்த்தத்தில் நீராடிவிட்டு இறைவனை தரிசனம் செய்துவிட்டு வாருங்கள். கண்டிப்பாக உங்களுக்கு நல்லது நடக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: