வணக்கம்!
இன்றைய காலத்தில் நன்றாக படித்து நல்ல வேலைக்கு செல்லவேண்டும் என்று நினைப்பவர்கள் அதிகம். நல்ல வேலைக்கு சென்று வங்கி நிறைய பணம் சேர்க்கவேண்டும் என்று நினைத்து அதனையும் சாதிக்கின்றார்கள். இதற்கு அதிகம் பேர் விரும்புகின்றனர்.
இப்படி நினைத்து செய்வது ஒன்றும் தவறு இல்லை ஆனால் வாழ்வில் கடைசியில் நீங்கள் செய்தது என்ன என்று பார்த்தால் உங்களுக்கே உங்களை பிடிக்காமல் சென்றுவிடும். நீங்கள் உருவாக்கியது என்று எதுவும் இல்லாமல் போய்விடும். நீங்கள் படைத்தது என்ற ஒன்று இருக்காது.
இன்றைக்கு நான் பெரிய கம்பெனியில் வேலை செய்கிறேன் என்று சொல்லலாம் ஆனால் அந்த கம்பெனி உங்களுடையது அல்ல. உங்களின் படைப்பும் அல்ல. யார் ஒருவருக்காக உழைக்கிறீர்கள் என்று அர்த்தம் தான்.
ஒவ்வொருவரும் தொழில் செய்யவேண்டும் அதற்கு நான் ஆன்மீகசேவை செய்யவேண்டும் என்பது இல்லை. கொஞ்ச காலம் ஒரு கம்பெனியில் வேலை பாருங்கள். தொழிலை நன்றாக கற்றுக்கொண்டு பணத்தையும் சேர்த்துக்கொண்டு உங்களுக்கு என்று ஒரு தொழிலை ஆரம்பியுங்கள். நீங்கள் ஒருவர் மட்டும் அங்கு வேலையாள் என்றாலும் கூட பரவாயில்லை கடைசியில் திருப்தியான ஒரு வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறேன் என்று நீங்கள் இந்த பூமியை விட்டு செல்லலாம்.
ஒரு தொழில் செய்வது என்பது அந்தளவுக்கு எளிதான காரியம் இல்லை என்றாலும் கடைசியில் ஒரு திருப்தி உங்களுக்கு கிடைக்கும் என்பதால் நான் சந்திக்கும் அனைவரிடமும் இதனை சொல்லுவது உண்டு.
ஒரு தெருவில் தள்ளுவண்டியில் ஏதோ ஒரு பொருட்களை விற்றுக்கொண்டு இருப்பவர்களுக்கு உள்ள ஒரு பெருமை பெரிய கம்பெனியில் மாதம் பத்துலட்சம் வாங்கும் நபர்களுக்கு இருக்காது என்பது தான் உண்மை.
உலகம் முழுவதும் சென்று வேலை பாருங்கள் கொஞ்சநாளில் நீங்கள் ஒன்றை உங்களுக்கு என்று தனியாக படைக்க பாருங்கள். நீங்கள் இந்த பூமியில் பிறந்ததின் அர்த்தம் தெரியும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment