வணக்கம்!
இந்த உலகத்தில் அட்வைஸ் செய்வது எளிது அதனை பின்பற்றுவது கடினம். ஜாதககதம்பத்தை படிக்கும் நண்பர்கள் எதிர்காலத்தில் அல்லது தற்பொழுது கூட பிறர்க்கு நல்லது செய்யவேண்டும் என்று நினைக்கதோன்றும்.
ஆன்மீகம் எல்லாம் கற்றுவிட்டு அதனை வைத்து பிறர்க்கு செய்யவேண்டும் என்றும் நினைக்கலாம். தாராளமாக இதனை எல்லாம் செய்யுங்கள் ஆனால் முதலில் உங்களுக்கு இதனை செய்து உங்களை தயார் செய்துக்கொள்ளுங்கள். அப்படி இல்லை என்றால் அசிங்கப்படுவது முதலில் நீங்களாக இருக்கும்.
பிறர்க்கு உங்களுக்கு திருமணம் நடக்கவேண்டும் என்றால் இந்த மந்திரத்தை சொல்லிக்கொண்டு வாருங்கள் என்று உபதேசித்தால் முதலில் உங்களுக்கு அந்த மந்திரம் உபதேசித்து நடந்ததா என்று பரிசோதனை செய்துக்கொள்வது நல்லது.
இன்றைய காலத்தில் ஆன்மீகத்தில் இருப்பவர்களுக்கே நிறைய பிரச்சினை இருக்கின்றது. அவர்கள் அனைவரும் பிறர்க்கு உபதேசம் செய்தால் எப்படி இருக்கும். என்னுடைய குரு சொன்னது தான் இது முதலில் உன்னை சரிசெய்துக்கொள் பிறகு அடுத்தவர்க்கு உபதேசம் செய் என்பார்.
உங்களின் அனைவருக்கும் தீபாவளி அறிவுரையாக சொல்லுவதும் இது தான், உங்களை சரிசெய்துகொள்ளுங்கள் பிறகு அடுத்தவர்களுக்கு சொல்லலாம்.
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment