வணக்கம்!
ராகு கேதுவையைப்பற்றி கொஞ்சம் பார்க்கலாம். ஒருவருக்கு ராகு தசா நடைபெற்றால் அது கேதுவின் பலனையும் சேர்த்து தான் கொடுக்கும். ராகுக்கு எதிராக இருக்கும் கேது கிரகம் தன்னுடைய பலனையும் கொடுக்கும். அதேப்போல் கேது தசா நடக்கும்பொழுது ராகுவும் தன்னுடைய பலனை கொடுக்கும்.
ஒரு கிரகம் நல்லதை செய்வதாக அமைந்தால் ஒரு கிரகம் தீமையை கொடுப்பதாக இருக்கும். உதாரணத்திற்க்கு ஒருவருக்கு ராகு தசா நடக்கிறது என்று வைத்துக்கொள்வோம் அவருக்கு மது அருந்த வேண்டும் என்ற நினைப்பு வந்து மது அருந்தினால் மறுநாளில் அந்த நாளுக்கு தலைவலியை கொடுக்கும் அது மது அருந்தவேண்டும் என்ற நினைப்பு ராகுவின் அம்சம். கேதுவின் அம்சம் என்பது தலைவலியை கொடுப்பது. இது எளிய உதாரணத்திற்க்கு சொன்னேன்.
பெரும்பாலும் நம் சோதிடர்கள் அனைவரும் ஒரே மாதிரியான பலனை சொல்லுவார்கள். அதாவது ராகு தசா நடந்தால் உங்களுக்கு பெரிய யோகத்தை கொடுக்கும் என்பார்கள். அதேப்போல் கேது தசா நடந்தால் கஷ்டத்தை கொடுக்கும் என்பார்கள்.
இரண்டு தசாவும் நல்லதையும் செய்யும் தீமையையும் செய்யும் என்பது தான் உண்மை. வாழ்க்கையில் ராகு கேதுவை பார்த்து வாழவேண்டும் என்பார்கள். ராகு கேது எப்படி நகர்கின்றதோ அதனை வைத்து நாம் வாழவேண்டும் என்பார்கள்.
நல்ல பலனை கொடுக்கும் காலத்தில் நாம் செய்யும் வேலையை அதிகப்படுத்தவேண்டும். தீமை பலனை கொடுக்கும் காலத்தில் நாம் ஆன்மீக பக்கம் திரும்பிக்கொண்டு இருக்கவேண்டும். ராகு கேதுவைபோல் ஆன்மீகஈடுபாடு வேறு எந்த கிரகமும் கொடுப்பதில்லை என்பது தான் உண்மை. நல்ல பலனை கொடுக்கும் நேரத்தில் அடித்து சம்பாதிக்க என்ன செய்யலாம் என்று பார்த்து அதற்கு தகுந்தவாறு செய்தால் நல்ல சம்பாதித்துவிடலாம்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
1 comment:
Vanakkam anna PRAPTHAM enral enna?oru padhiu podungal.
Post a Comment