Followers

Sunday, October 2, 2016

நவராத்திரி தரிசனம்

ணக்கம்!
          இன்று காலையில் அம்மன் ஹோமத்தை முடித்துவிட்டு நானும் மதுரையை சேர்ந்த திரு கோபியும் பெரம்பலூர் சென்றோம். அங்கு ஒரு வேலையை முடித்துவிட்டு சிறுவாஞ்சூர் மதுரகாளியம்மனை தரிசித்தோம்.

மதுரகாளியம்மனை நவராத்திரியில் தரிசனம் செய்வதால் மாலை 3 மணிக்கு தரிசனம் கிடைத்தது. இன்று இதனை தரிசனம் செய்யபோகிறோம் என்று கனவிலும் நினைத்து பார்க்கவில்லை ஆனால் தரிசனத்தை இறைவனே ஏற்படுத்திக்கொடுத்து இருக்கிறான் என்பது தான் உண்மை. அம்மனை மிக அருகில் சென்று தரிசனம் செய்துவிட்டு அதன் பிறகு திருபட்டூர் சென்றோம். 

திருபட்டூர்  பிரம்மன் கோவில் என்பதால் நமது தலைஎழுத்தை மாற்றும் சக்தி பிரம்மனுக்கு உண்டு என்று சொல்லுகின்றார்கள். தலை எழுத்தை எல்லாம் மாற்றவேண்டாம் என்று நினைத்துக்கொண்டு பழமையான கோவிலை தரிசனம் செய்துவிட்டு வரவேண்டும் என்பதால் சென்றோம்.



சரியாக நான்கு மணிக்கு சென்று தரிசனம் செய்தோம். நமது அம்மன் அருளால் அங்கும் நல்ல தரிசனம் கிடைத்தது. அதனை முடித்துவிட்டு ஊருக்கு வந்தவுடன் உங்களுக்கு இந்த பதிவை தந்தேன்.

நமது கட்டண சேவையில் படிக்கும் நண்பர்களுக்கு உடனுக்குடன் தரிசனத்தை பற்றி படம் அனுப்பிவிடுவது உண்டு. அவர்கள் அதனை உடனே பார்த்து தரிசனம் செய்துவிடுவார்கள். 

நெருங்கிய நண்பர்களை அழைத்துக்கொண்டு இப்படி கோவிலுக்கு செல்வது உண்டு. ஊர் சுற்றுவதற்க்காக இல்லை நம் வழியாக அந்த கோவிலின் சக்தி சம்பந்தப்பட்ட நண்பர்களுக்கு கிடைக்கும் என்பதால் இப்படி செல்வது உண்டு.

நமது அம்மன் அருளால் தான் பல விசயங்கள் நடைபெறும். எந்த கோவிலுக்கு சென்றாலும் நமது அம்மன் அருளால் அங்குள்ள சக்தியும் கிடைக்கும் என்பதால் பல கோவில்களை தரிசனம் செய்வேன். 

நீங்களும் இந்த கோவிலை எல்லாம் தரிசனம் செய்ய வேண்டும் என்பது எனது சின்ன கோரிக்கை சென்று தரிசனம் செய்துவிட்டு வாருங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: