வணக்கம்!
பொதுவாக நம்ம ஆட்களுக்கு நிறைய அறிவு தடுமாற்றம் ஏற்படும். ஒரு சிலருக்கு இயற்கையில் நல்ல அறிவை பெற்றாலும் அவர்கள் பெரும்பாலும் தவறான வழியில் சென்றுவிடுவார்கள்.
இன்றைய காலத்தில் நல்ல அறிவை உடையவர்களிடம் நாம் சென்று கேட்டால் உங்களிடம் நல்ல அறிவு இருக்கின்றது எதற்கு தவறான வழியை எல்லாம் செய்கிறீர்கள் என்றால் அவர்கள் சொல்லுவது அறிவு இருக்கின்றது அதனால் செய்கிறேன் என்பார்கள்.
அறிவை கொடுத்ததே தவறான வழியில் செல்வதற்க்கு என்று ஒரு நினைப்பால் இதனை செய்கின்றார்கள். இதற்கு எல்லாம் நாம் சோதிட வழியாக தேடுதலை செய்யவேண்டும் அல்லவா.
ஜாதகத்தில் புதன்கிரகம் ஏதோ ஒரு நல்லநிலையில் இருந்து அது தீயகிரகத்தின் சாரம் பெற்றுவிட்டால் நல்ல அறிவை கொடுத்து அதோடு வில்லங்கத்தையும் செய்ய வைத்துவிடும்.
புதன்கிரகம் எந்த கிரகத்தோடு சேருகின்றதோ அந்த கிரகத்தின் தன்மையை கொடுக்க கூடிய ஒரு கிரகம். புதன் மட்டும் நம் ஜாதகத்தில் நல்ல நிலைமையில் இருந்தால் போதும் ஒரளவு நல்ல அறிவை பெற்று வாழ்வில் முன்னேற்றம் அடைந்துவிடலாம்.
புதன்கிரகம் நம்மோடு வாழ்வில் நிறைய விசயங்களை செய்கிறது ஆனால் அதனை நாம் கவனிக்க தவறிவிடுகிறோம். உங்களின் ஜாதகத்தில் புதன் கிரகம் எந்த நிலையில் இருக்கின்றது உங்களின் அறிவு எப்படி இருக்கின்றது என்பதை தெரிந்துக்கொண்டு நீங்கள் செயல்படுவது சரியான வழியா என்பதை யோசித்து பாருங்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment