Followers

Friday, October 14, 2016

வெள்ளிக்கிழமை வழிபடும் கோவில்


ணக்கம்!
          வெள்ளிக்கிழமை என்றாலே மிகவும் புனிதமான ஒரு நாளாகவே மக்கள் கருதுவார்கள். பெரும்பாலும் நம்ம ஆட்கள் வெள்ளிக்கிழமை அன்று அப்படியே ஆன்மீகவாதியாகவே மாறிவிடுவார்கள்.

வெள்ளிக்கிழமை ஆன்மீகவாதியாக மாறுங்கள். வீட்டை சுத்தமாக வையுங்கள். வெள்ளிக்கிழமை அன்று ஒரு பூசாரி பூஜை செய்யும் கோவிலாக பார்த்து அந்த கோவிலுக்கு சென்று வழிபட்டு வாருங்கள்.

எனக்கு தெரிந்த ஒரு நண்பர் வெள்ளிக்கிழமை அன்று ஒரு பிரபல கோவிலுக்கு சென்று வருவார். அந்த கோவிலில் என்ன நடக்கும் என்றால் வெள்ளிக்கிழமை அன்று கிடா வெட்டி அந்த கோவிலில் வழிபாடு செய்வார்கள். அதாவது மிகவும் பிரசித்துபெற்ற கோவிலில் அந்த கோவிலில் சிறப்பு கிடா வெட்டுவது தான்.

நண்பர் அந்த கோவிலுக்கு சென்று வழிபாடு மட்டும் செய்துவிட்டு வந்துவிடுவார். அவர் இன்று பெரிய அளவில் இருக்கிறார். நம்ம ஆட்கள் வெள்ளிக்கிழமை செல்லும் கோவில் எல்லாம் குரு சம்பந்தப்பட்ட கோவிலாக இருக்கும்.

நாம் செல்லும் கோவில் கூட நமக்கு ஏற்றவாறு உள்ள கோவிலாக பார்த்து செல்லும்பொழுது நல்ல பலனை கொடுக்கும். சுக்கிரனின் காரத்துவத்தை நாம் பெறவேண்டும் என்றால் பூசாரி பூஜை செய்யும் கோவிலாக பார்த்து செல்லவேண்டும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: