வணக்கம்!
ஒரு மனிதன் இப்படி தான் இருக்கவேண்டும் என்று நாம் நினைக்கிறோம். நாம் பழகும் மனிதன் இந்த குணத்தோடு இருந்தால் தான் நாம் அவனோடு பழகவேண்டும் என்று ஒரு விதியோடு நாம் இருப்போம். அப்படிப்பட்ட குணத்தோடு இருந்தால் பழகுவீர்கள் அப்படி இல்லை என்றால் நான் பழகமாட்டேன் என்று இருப்பீர்கள். நீங்கள் எதிர்பார்க்கும் இந்த குணநலத்தோடு எப்பொழுதாவது ஒருவர் வரலாம் அதன் பிறகு அவரும் மாறிபோய்விடலாம்.
மனிதனிடம் இப்படிப்பட்ட குணத்தோடு தான் இருக்கவேண்டும் என்று எதிர்பார்த்தால் கண்டிப்பாக அது நடக்காதா ஒன்று. மனக்காரகன் சந்திரன் மிக வேகமாக செல்லக்கூடிய ஒரு கிரகம். சந்திரன் மனதை மாற்றிக்கொண்டே சென்றுக்கொண்டு இருப்பான் அப்புறம் நாம் எப்படி மனிதனிடம் ஒரு குணத்தை எதிர்பார்ப்பது இதனை கொஞ்சம் புரிந்துக்கொண்டாலே போதும் அனைத்து மனிதனையும் நாம் ஏற்றுக்கொள்ளமுடியும்.
தற்பொழுது உள்ள மனநிலை அடுத்த அரைமணி நேரத்தில் இருப்பது இல்லை. ஏன் என்றால் சந்திரனின் சுழற்சி அப்படிப்பட்ட ஒன்று. நாம் மனிதனிடம் ஒரே குணநிலையை எதிர்பார்ப்பது கடினம். மனிதனிடம் அடிப்படையான ஒரு குணநிலை இருக்கும் அது மாறாது ஆனால் மேலோட்டமாக இருக்கும் குணநிலை மாறிக்ககொண்டே இருக்கும்.
நீங்கள் பிறந்தபொழுது சந்திரன் இருந்த ராசி உங்களின் அடிப்படை குணநிலை தற்பொழுது கோச்சாரபடி சந்திரன் சென்றுக்கொண்டிருப்பது உங்களின் மேலாேட்டமான ஒரு குணநிலை. இது இரண்டும் சரியாக இருக்கும்பொழுது நீங்கள் சரியாக செயல்படுவது போல இருக்கும்.
நீங்கள் பிறந்தபொழுது சனியின் வீடாக ராசி இருக்கின்றது என்று வைத்துக்கொள்வோம் தற்பொழுது சந்திரன் செவ்வாயின் வீட்டில் அதாவது சனியின் பகை கிரகமான செவ்வாயின் வீட்டில் இருந்தால் உங்களின் அடிப்படை குணத்திற்க்கும் தற்பொழுது உள்ள சந்திரன் கோச்சாரபடி கொடுக்கும் குணத்திற்க்கும் அதாவது மேலோட்டமான குணத்திற்க்கும் ஏற்றுக்கொள்ளாது. நீங்கள் ஒரு வித வெறுப்பான ஒரு நிலையை அடைவீர்கள்.
உங்களின் அடிப்படை குணத்தோடு கோச்சாரபடி சந்திரன் கொடுக்கும் நல்ல குணத்தை பெறும்பொழுது அன்று நீங்கள் உற்சாகநிலையை அடைவீர்கள். சந்திரனை நாம் புரிந்துக்கொண்டு செயல்பட்டாலே முக்கால்வாசி நாம் வெற்றிபெற்றுவிட்டோம் என்று அர்த்தம்.
நீங்கள் ஒரு மனிதனைப்பார்த்து இப்படி தான் இருப்பான் என்று நினைக்காதீர்கள். அதாவது எல்லோரும் ஒரு காலத்தில் இருப்பார்கள் அடுத்த காலத்தில் போய்விடுவார்கள். ஒருவர் இப்படி தான் இருப்பார் என்று நீங்கள் எதிர்பார்த்து இருந்தால் நீங்கள் தோற்றுபோய்வீர்கள். உங்களால் அடுத்தவரை ஏற்றுக்கொள்ளமுடியாது. இன்றைக்கு உலகத்தில் உள்ள பிரச்சினையே இது தான் அதாவது அனைவரிடமும் ஒன்றை எதிர்பார்த்தால் சிக்கல் தான் மிஞ்சும்.
இதனை எல்லாம் புரிந்துக்கொண்டு தான் நம்ம இந்திய ஆன்மீகம் மனம் என்பதை நம்பாதே மனமற்ற நிலையில் இரு என்று சொல்லுகின்றது. சந்திரன் வேகமாக செல்லுகின்றது ஒவ்வொருவரின் மனமும் வேகமாக செல்லுகிறது. புரியவில்லை என்றால் மறுபடி மறுபடியும் படியுங்கள் புரியும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment