வணக்கம்!
. இரத்தசம்பந்தப்பட்ட வியாதிகள் எல்லாம் வருவதற்க்கு காரணம் செவ்வாய்கிரகத்தின் பாதிப்பால் தான் வருகின்றது. ஒருவருக்கு செவ்வாய்கிரகம் சரியில்லை என்றால் அவர்களுக்கு இரத்த சம்பந்தப்பட்ட வியாதி இருக்கின்றது என்று அர்த்தம்.
செவ்வாய்தோஷம் கூட உங்களின் ஆன்மீகபயணத்தை சீரழிக்கும் என்பதால் தான் செவ்வாய்தோஷம் இருக்கின்றதா என்று பார்த்துள்ளார்கள். செவ்வாய்தோஷம் இல்லை என்றால் அவர்கள் ஆன்மீகத்தில் ஈடுபடலாம் என்றும் கூறியுள்ளார்கள்.
இன்றைக்கு இருக்கும் உலகத்தில் காமம் அதிகம் இருக்கின்றது என்றால் அதுவும் செவ்வாய்தோஷத்தால் மட்டுமே இருக்கின்றது என்று அர்த்தம் கொள்ளவேண்டும் செவ்வாய்தோஷம் இருப்பவர்களுக்கு காம உணர்வும் அதிகமாக இருக்கும்.
செவ்வாய்கிழமை பெரும்பாலும் விரதம் இருக்க சொல்லுவது உண்டு. செவ்வாய்கிழமை விரதம் இருந்தால் இரத்த சம்பந்தப்பட்ட வியாதியும் வராது. அதோடு பல நன்மைகளும் வரும் என்று ஏற்கனவே சொல்லிருக்கிறேன்.
பொறுமை என்ற குணத்தை பெறவேண்டும் என்றால் அதிக விரதம் இருக்கவேண்டும் என்பதை உணர்ந்து தான் நமது முன்னோர்கள் நிறைய விரதமுறையை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். விரதமுறையை கடைபிடித்து வரும்பொழுது கொஞ்ச கொஞ்சமாக கோபம் குறைந்து பொறுமை வந்துவிடும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment