உலகத்தில் உள்ள மனிதர்களுக்கு எல்லாம் அதிக பிரச்சினையை கொடுத்தது மனிதர்களின் மனம் தான் காரணம். மனதால் தான் மனிதனுக்கு பிரச்சினை. மனது என்றால் சந்திரன் தானே. சந்திரன் தான் மனிதனுக்கு பிரச்சினை.
சந்திரனே வேண்டாம் என்று முடிவு செய்து போகிறவன் ஞானி. நாம் ஞானியாக வேண்டாம் ஏதோ நல்ல ஒரு வாழ்க்கை அமைந்தால் போதும் என்று நினைப்பவர்கள் சந்திரனை வணங்கி நல்ல பலனை கொடு என்று வேண்டுதல் செய்யலாம். சந்திரன் காரத்துவம் உடைய விசயங்களில் உங்களின் கவனத்தை செலுத்தலாம்.
சந்திரனின் நட்சத்திரம் வரும் நாளில் நாம் சென்று சிவனை தரிசனம் செய்யலாம் அல்லது சந்திரனை கூட வணங்கலாம். சந்திரனுக்கு என்று தனியாக ஒரு சில கோவில்களில் முக்கியத்துவம் கொடுப்பார்கள் அந்த கோவிலுக்கு சென்று வரலாம்.
சந்திரனை வணங்குவது உங்களுக்கு கடினமாக இருந்தால் உங்களின் ராசி அதிபதி யார் என்று பார்த்து அவரை அவரின் நாள் வரும்பொழுது சென்று ஒரு அர்ச்சனை செய்து வழிபடலாம்.
வளர்பிறை நாட்களில் சந்திரனை நீங்கள் இரவு நேரத்தில் பார்த்து மகிழலாம். நிலவை பார்க்க பார்க்க உங்களின் மனதில் நல்ல எண்ணங்களை அது விதைக்கும் என்பதால் இதனை செய்யலாம்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment