வணக்கம்!
தனவீடு என்று சொல்லக்ககூடிய இரண்டாம் வீடு வலுபெறும்பொழுது தான் மனிதனுக்கு பணம் என்பது புரள ஆரம்பிக்கும். தனவீடு ஒரு சிலருக்கு எந்தநாளும் நன்றாக வேலை செய்துக்கொண்டே இருக்கின்றது. பல பேருக்கு இரண்டாவது வீடு என்பது இருக்கின்றதா என்பதை தெரியாமல் இருக்கும் காரணம் பணம் என்பது சுத்தமாக இருக்கவே இருக்காது.
எனக்கு கூட பல காலங்கள் இரண்டாம் வீடு என்ற ஒன்று இருக்கின்றதா என்பதே தெரியாமல் இருந்தது. வெளிப்படையாக சொல்லவேண்டுமானால் அந்த காலத்தில் சாப்பாடு கூட கிடைக்கவில்லை என்று தான் சொல்லவேண்டும். நாம் சாப்பிடும் சாப்பாட்டை கூட காட்டக்கூடிய இடம் இரண்டாம் வீடு அல்லவா. அதற்கும் எனக்கு ஆப்பு வைத்தது என்று தான் சொல்லவேண்டும்.
பொதுவாக இரண்டாம் வீடு வலுகுறையும்பொழுது அவன் பரதேச வாழ்க்கையை வாழவேண்டும் என்பது விதி. இன்றைக்கு பல இளைஞர்கள் எல்லாம் ஊரு விட்டு ஊரு சென்று ஒரு நல்ல வேலை அமையும் வரை அவர்கள் எல்லாம் பரதேசவாழ்க்கையை தான் வாழ்ந்துக்கொண்டு இருக்கின்றார்கள். இரண்டாம் வீடு கெடும்பொழுது ஒவ்வொருவரும் பரதேசி தான்.
பல பேருக்கு இப்படி பல வருடங்கள் வேலை செய்யாமல் கிடந்த இடம் திடிர் என்று வேலை செய்ய ஆரம்பித்துவிடும் அதன் பிறகு அவனை கையில் பிடிக்கமுடியாது. பணம் சட்டை பையில் புரள ஆரம்பித்தால் தானே ஒருத்தன் நன்றாக இருக்கமுடியும் அதற்கு எல்லாம் காரணம் இரண்டாம் வீட்டு அதிபதி வலுபெறும்பொழுது நடைபெற ஆரம்பிக்கும்.
எனக்கு இரண்டாம் வீடு வலு இல்லாதபொழுது நான் சாமியார்களோடு சுற்றிக்கொண்டு இருந்தேன். எத்தனை நாள் தான் இப்படியே சுற்றிக்கொண்டு இருக்கமுடியும். கடவுளாக பார்த்து அதற்கு ஒரு நல்லவழியை ஏற்படுத்திக்கொடுத்தார்.
இரண்டாவது வீட்டை சரிசெய்யும் ஒரு வாய்ப்பு உருவாகியது. அதன் பிறகு தான் ஒரு சுகமான ஒரு வாழ்க்கையை வாழமுடிந்தது. நமக்கு நன்றாக வேலை தெரியும் என்றாலும் கூட அதற்கு செய்யவேண்டிய ஒரு காலத்தை கடவுள் தான் தீர்மானிக்கவேண்டும் அல்லவா அந்த நேரத்தை கடவுள் கொடுத்தார் என்று தான் சொல்லவேண்டும்.
இன்றைக்கு பல பேருக்கு நன்றாக சோதிடம் தெரியும். இன்றைக்கு உங்களிடம் நான் திடிர் என்று இரண்டாவது வீட்டு அதிபதி யார் என்று கேட்டால் உடனே உங்களுக்கு சொல்ல தெரியாது. உங்களுக்கு சோதிடம் தெரிந்தும் உங்களுக்கு தெரியாது என்று பதில் வந்தால் உங்களின் கர்மா அப்படி வேலை செய்கிறது என்று அர்த்தம்.
இனிமேலாவது அப்படி இருக்காமல் உங்களின் ஜாதகத்தை எடுத்து ஒவ்வொரு வீட்டிற்க்கும் அதிபதி யார் அதனால் நமக்கு என்ன பலன் என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள். அதன் பிறகு உங்களின் வாழ்க்கை எப்படி இருக்கின்றது என்பதை பாருங்கள். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்துக்கொண்டு விட்டால் போதும். உங்களின் வாழ்க்கை சூப்பராக போய்க்கொண்டு இருக்கும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment