Followers

Tuesday, March 28, 2017

சந்திரன் செவ்வாய் கூட்டணி


வணக்கம்!
          சந்திரன் மற்றும் செவ்வாய் சேர்ந்து இருந்தால் அந்த நபர்களின் தாய்க்கு ஆப்ரேஷன் செய்யவேண்டிய நிலை ஏற்படும் என்று சொல்லிருந்தேன். பல நண்பர்கள் நேற்று தொடர்புக்கொண்டு இதனைப்பற்றி கேட்டனர்.

சந்திரன் செவ்வாய் சேரும்பொழுது அந்த தசாவில் அல்லது ஏழரை சனி அஷ்டமசனி காலத்தில் அவர்களின் தாய்க்கு ஆப்ரேஷன் செய்யவேண்டிய ஒரு நிலை ஏற்படுகின்றது. பெரும்பாலும் இதனை நான் அனுபவத்தில் நிறைய ஜாதகத்தில் பார்த்து இருக்கிறேன்.

ஒருவரின் ஜாதகத்தில் இப்படி இருந்தது. அவரின் தாய் சமையலறை தான் வேலையாக இருந்தார். எப்படி என்றால் அவர் ஓட்டல் நடத்திக்கொண்டு இருந்தார். அவரின் தாய் தான் அனைத்தையும் சமைத்து அவரின் வியாபாரத்திற்க்கு உறுதுணையாக இருந்தார்.

ஒவ்வொரு ஜாதகத்திலும் அந்த ஜாதகத்தின் அமைப்புக்கு தகுந்தவாறு பலன் கொடுத்துக்கொண்டு இருக்கின்றது. சந்திரன் செவ்வாய் சேர்ந்து இருந்து சந்திரன் தசா அல்லது செவ்வாய் தசா நடந்தால் அவரின் தாய்க்கு அடிபடுவது கூட நடக்கும்.

எனக்கு தெரிந்த நண்பர் ஒருவரின் ஜாதகத்தில் சந்திரன் செவ்வாய் கூட்டணி இருந்தது. அவருக்கு செவ்வாய் தசா நடந்தது. செவ்வாய் தசா நடக்கும்பொழுது அவரின் தாய் ஒரு ரோட்டை கடக்கும்பொழுது ஒரு காரில் அடிப்பட்டு இறந்தார்.

ஒவ்வொரு ஜாதகத்தையும் நாம் பார்த்த அதற்கு தகுந்தவாறு தான் பலனை முடிவு செய்து அதற்கு தக்க பரிகாரத்தை செய்யமுடியும். சந்திரனுக்கு தற்பொழுது பரிகாரம் செய்யப்ப்டுகின்றது. அதற்கு பரிகாரம் செய்துக்கொள்ளலாம்.

சந்திரன் பரிகாரத்தை ஏன் இவ்வளவு நாளாக இழுக்கின்றீர்கள் என்று நண்பர் ஒருவர் கேட்டார். சந்திரன் பரிகாரத்தில் அனைவரும் கலந்துக்கொண்டு நல்ல நிலையை அடையவேண்டும் என்பதற்க்காக இதனை தாமதம் செய்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: