வணக்கம்!
குரு பூஜை என்ற ஒன்று சித்தர்களுக்காக செய்யவேண்டிய ஒன்று. பெரும்பாலும் சித்தர்களின் வழியை கடைபிடிப்பவர்கள் அவர்களின் நட்சத்திரம் வரும்நாளில் வருடத்திற்க்கு ஒரு முறை குருபூஜையை செய்வார்கள். அவர்களுக்கு வழிகாட்டியாக சித்தர்கள் இருப்பதால் அவர்களுக்கு நன்றி தெரிவித்து அவர்களின் ஆசியை பெறுவதற்க்கு செய்யும் ஒரு விழா தான் குருபூஜை.
நமக்கு அவர்களின் நட்சத்திரம் வரும்நாளில் அல்லது அவர்கள் பிறந்த மாதத்தில் வரும் பெளர்ணமி நாளில் இந்த குருபூஜையை நாம் செய்யலாம். கண்டிப்பாக இதனை செய்யவேண்டுமா என்றால் கண்டிப்பாக செய்து தான் ஆகவேண்டும்.
சித்தர்களின் குருபூஜையில் நாமும் கலந்துக்கொண்டு அவர்களின் ஆசியை பெறலாம். பொதுவாக தற்பொழுது நிறைய இடங்களில் இப்படிப்பட்ட விழா நடைபெறுகிறது. விழா நடைபெறுகிறது என்றால் பூஜை செய்தால் பரவாயில்லை அங்கு நடப்பது வேறுவிதமாக இருக்கின்றது.
நான் வெளியூர் பயணத்தில் ஒரு இடத்தில் கவனித்தேன். ஒரு சித்தரின் பெயரை போட்டு குரு பூஜை என்று இருந்தது. அங்கு இசைக்கச்சேரி வைத்திருந்தார்கள். சினிமா பாட்டை பாடி நடனம் நடந்துக்கொண்டு இருந்தது. சித்தர்கள் காட்டிய வழி இன்று தவறாக போய்க்கொண்டு இருக்கின்றது.
பல இடங்களில் ஒவ்வொருத்தருக்கும் பொன்னாடை போர்த்தி விழா நடக்கிறது. கண்டிப்பாக இப்படிப்பட்ட செயல் சித்தர்களின் வழிக்கு எதிராக தான் இருக்கும். அவர்களின் அருள் கிடைப்பதற்க்கு மாறாக வேறு ஏதாவது கிடைக்கும்.
எனது ஊருக்கு அருகில் ஒரு இடத்தில் பார்த்தேன். ஒரு இளைஞர்க்கு குருபூஜைக்கு பயங்கரமான விளம்பரம். முதல் ஆண்டு குரு பூஜை என்று இருந்தது. அந்த இளைஞர் எப்படி என்றால் ஒரு ரெளடி பய அவனை எதிரி கும்பல் வெட்டி கொலை செய்தது. அதற்கு குரு பூஜை நடத்திக்கொண்டு இருக்கின்றார்கள். எதிர்காலத்தில் அவனை பெரிய மகான் போல காட்டி அவனுக்கு கோவிலை கட்டிவிடுவார்கள். அவனையும் பின்பற்ற ஒரு சிலர் இருப்பார்கள்.
சித்தரைப்பற்றி சொல்லுவதற்க்கு வேறு ஏதோ ஒன்றை சொல்லிக்கொண்டு இருக்கின்றார்கள் என்று நினைக்கலாம். தவறான பாதையை நம்ம மக்கள் பின்பற்றி செல்லகூடாது என்பதற்க்காக தான் இதனை எல்லாம் சொல்லுகிறேன்.
சித்தர்களின் வழி எல்லாம் நம்ம மக்கள் பிடிக்கிறது என்றால் அவர்கள் சொன்ன வழி மிகச்சிறந்த வழி என்று தான் சொல்லவேண்டும். உன் ஆத்மாவை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுவதற்க்கும் உன் உடலையும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள சொன்னவர்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment