வணக்கம்!
1950 ஆம் வருடத்தில் அமெரிக்காவில் ஒரு திட்டம் இருந்ததாம் நிலாவில் ஒரு அணுகுண்டை போட்டு வெடிக்க வைப்பது. பூமியில் இருந்து மனிதர்கள் பார்க்கும் நிலா பகுதியில் அதனை வெடிக்க வைக்கவேண்டும் என்று அமெரிக்காவின் திட்டமாக இருந்ததாம். இது மக்களிடம் வரவேற்பு இல்லாத காரணத்தால் இதனை கைவிட்டதாக செய்தி தாள்களில் படித்தேன்.
நல்ல வேளை நிலா தப்பியது என்று கூட சொல்லிருந்தார்கள். இது தான் மனிதனின் வக்கிரபுத்தி என்று சொல்லுவது. எப்படி எல்லாம் அழிவை ஏற்படுத்துவது என்பதை சிந்திக்கும் ஒரு மனநிலை இருந்தால் சந்திரன் ராகுவோடு அல்லது சனியோடு சேர்ந்துக்கொண்டு இருக்கின்றது என்று அர்த்தம்.
வக்கிரபுத்தி ஒரு மனிதனுக்கு ஏற்படுவதற்க்கு அதிகம் காரணமாக இருப்பது சனிக்கிரகம் அல்லது ராகு கிரகத்தின் தாக்கம் அதிகமாக ஜாதகத்தில் இருக்கின்றது என்று அர்த்தம். அதுவும் சந்திரனோடு சேர்ந்துக்கொண்டு இந்த கிரகங்கள் செய்யும் தீயவேலை என்று சொல்லலாம்.
ஒரு சிலர் தன்னுடைய மனைவியை போட்டு சித்திரவதை செய்துக்கொண்டு இருப்பார்கள். அவன் அவன் லெவலுக்கு சிந்தனை செய்வான். அமெரிக்காரானுக்கு முடிந்ததை அவன் வக்கிரபுத்தியோடு சிந்தித்து இருக்கிறான். நம்மாலுக்கு கிடைத்து அவனுடைய மனைவி.
வக்கிரபுத்தி உருவாதற்க்கு சந்திரனுக்கு ஏற்படும் தீயகிரகங்களின் பார்வை அல்லது சேர்க்கை தான் காரணம். உங்களுக்கு இப்படிப்பட்ட தாக்குதல் இருந்தால் நீங்களும் சந்திரன் பரிகாரத்தில் கலந்துக்கொள்ளலாம்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment