வணக்கம்!
சந்திரன் தாய்க்கு காரகம் வகிக்கின்றார். சந்திரன் ஒருவருக்கு கெட்டால் அவரின் தாய் உடல் நலம் கெட்டுவிடும். எப்பொழுதும் நோயோடு வாழ்கின்ற ஒரு நிலையை உருவாக்கிவிடும்.
சந்திரன் கெட்டு தாயின் உடல்நிலை கெட்டு அதற்க்காக கஷ்டப்பட்டு வாழ்கின்ற பையன்களை எல்லாம் நான் நிறைய பார்த்து இருக்கிறேன். ஒரு சிலருக்கு சந்திரன் கெட்டு சம்பந்தப்பட்ட தசா நடக்கும்பொழுது தாய்க்கு வரக்கூடாத ஒரு நோய் வந்து மருத்துவமனையிலேயே இருந்து கஷ்டப்பட்டவர்களை நான் நிறைய பார்த்து இருக்கிறேன்.
சந்திரன் ராகுவோடு சேரும்பொழுது அவரின் தாய்க்கு வரும் வியாதி மிகவும் கோரமாக உள்ள நோய் வந்துவிடும். அந்த நோயோடு போராடுகின்ற நிலையும் இருக்கின்றது.
சந்திரன் செவ்வாயோடு இணையும்பொழுது சம்பந்தப்பட்ட தசா வந்தால் அவரின் தாய்க்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய ஒரு நிலை வந்துவிடும்.
சந்திரன் தசா வந்தால் அவர்களின் தாய் எப்படி இருக்கின்றார்கள் என்று அடிக்கடி கண்காணிப்பது நல்லது. மருத்துவ ஆலோசனையும் அவ்வப்பொழுது கேளுங்கள்.
சந்திரன் பரிகாரத்திற்க்கு ஜாதகத்தை அனுப்புவர்கள் அனுப்பி வையுங்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment