Followers

Wednesday, March 15, 2017

கேள்வி & பதில்


வணக்கம்!
          நான் ஸ்ரீஅன்னை அரவிந்தரின் பக்தன் மற்றும் ஈஷா யோகாவிலும் தீவிர ஈடுபட்டுள்ளேன்,நான் பரிகாரத்திற்கு ஜாதகம் அனுப்பலாமா?

நல்லூர் பரமேஸ்.

வணக்கம்
          ஒரு சில சித்த மார்க்க யோகாவில் கிரகங்களை சாந்தப்படுத்துவதற்க்கு என்று சொல்லிக்கொடுக்கிறார்கள். அதனை பயன்படுத்தி கிரகங்களை சாந்தப்படுத்தமுடியும். மேலே சொன்ன யோகாவைப்பற்றி எனக்கு தெரியவில்லை.

எதில் ஈடுபட்டாலும் நம்முடைய வாழ்க்கை தரம் எந்தளவுக்கு இருக்கின்றது என்பதை அனுபவத்தில் கவனித்து பாருங்கள். நான் பரிகாரம் செய்யவேண்டும் என்பது சொல்லுவது கூட உங்களின் வாழ்க்கை தரம் உயர்வதற்க்கு வழியை தான் நான் செய்கிறேன். 

வாழ்க்கை நன்றாக மேலே வந்துவிட்டது என்று நினைப்பவர்கள் அவர் அவர்கள் கடைபிடிக்கும் வழக்கத்தை அப்படியே கடைபிடிக்கலாம். வாழ்க்கை தரம் மேலே வரவில்லை என்பவர்கள் பரிகாரத்திற்க்கு வரலாம். 

பரிகாரத்திற்க்கும் நீங்கள் செய்யும் ஆன்மீகபணிக்கும் மற்ற காரியங்களுக்கும் தொந்தரவு அளிக்காது. உங்களை மேலும் மேலும் உயர்த்த மட்டுமே வழியை தரும். கிரகங்களுக்காக தான் பரிகாரம் செய்கிறோம். உங்களுக்கு விருப்பட்டால் நீங்கள் தாராளமாக ஜாதகத்தை அனுப்பலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: