வணக்கம்!
சந்திரன் சரியில்லை என்றால் என்ன நடக்கும் என்பதை பற்றி நிறைய பதிவில் பார்த்து இருக்கிறோம். சந்திரன் சரியில்லை என்றால் நாம் செய்ய நினைப்பதை செய்யாமல் விட்டுவிடுவதும் உண்டு.
நமக்கு நன்மை செய்பவர்களுக்கு நாம் எதாவது ஒரு விதத்தில் நன்மை செய்யவேண்டும் இது தான் நல்லது. சந்திரன் சரியில்லாமல் இருக்கும் நபர்கள் செய்தநன்றியை மறந்துவிடுவார்கள். சந்திரன் சரியில்லாத நபர்க்கு திடிர் வாழ்வு கிடைக்கும் அந்த வாழ்வும் கொஞ்ச நாளில் அவர்களை விட்டு சென்றுவிடும்.
நல்லவாழ்வு கிடைக்கும்பொழுது பழைய நண்பர்களை மறந்துவிட்டு புதிய வாழ்க்கை வாழ்வார்கள். மறுபடியும் பழைய நிலைக்கு வரும்பொழுது அந்த பழைய நண்பர்களை தேடுவார்கள்.
சந்திரன் சரியில்லை என்ற நபர்கள் முடிந்தவரை பொறுமையாக அனைத்தையும் கையாளவேண்டும். எவ்வளவு உயரத்திற்க்கு சென்றாலும் தன்னை எளிமைப்படுத்தி வாழ கற்றுக்கொண்டால் சந்திரன் தங்களுக்கு சாதகமாக இருக்கும்.
சந்திரன் சரியில்லாதவர்கள் அருகில் இருக்கும் சிவாலயத்திற்க்கு செல்வதோடு கொஞ்சம் மனதை இறுக்கத்தோடு வைத்துக்கொள்ளாமல் ஜாலியாக இருக்கும் விசயத்தில் மனதை செலுத்தலாம்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment