Followers

Tuesday, March 21, 2017

தண்ணீர் தரும் வியாதி


வணக்கம்!
          நமக்கு ஏற்படும் நோய்களுக்கு பல காரணங்கள் சொன்னாலும் அடிப்படையாக ஒரு காரணத்தை சொல்லவேண்டும் என்றால் அது தண்ணீர் தான். தண்ணீரால் தான் முதலில் நோய் என்பது உருவாவதற்க்கு காரணமாக இருக்கும். தண்ணீரை நாம் பெரிதுப்படுத்துவதில்லை என்பது தான் கவலையான ஒன்று.

எனக்கு சிறுவயதில் எங்களின் ஊரில் தண்ணீர் எடுப்பதற்க்கு அவர் அவர்களின் வீட்டில் உள்ள கிணற்றில் தான் குடிப்பதற்க்கு தண்ணீரை எடுப்பார்கள். கிணறு சுமார் முப்பது அடி வெட்டி வைத்திருப்பார்கள். அந்த தண்ணீர் என்பது சூரிய ஒளிப்பட்டு அந்த குடிநீர் குடிப்பதற்க்கு அப்படி ஒரு சுவையாக இருக்கும். காற்றோட்டம் மற்றும் சூரிய ஒளியால் அந்த தண்ணீரை குடிப்பதற்க்கு வரம் பெற்று இருக்கவேண்டும்.

இன்று நிலைமை தலைகீழ். போர் போட்டு அந்த தண்ணீரை தான் பயன்படுத்தவேண்டும். போரில் உள்ள தண்ணீர் அந்தளவுக்கு இருப்பதில்லை. கிராமபுறத்தில் கிணறு இல்லை என்பது தான் உண்மை.

நகர்புறத்தில் சொல்லவே வேண்டியதில்லை அந்தளவுக்கு மோசமான தண்ணீர். என்ன தான் பில்டர் செய்து தண்ணீரை குடித்தாலும் அதுவும் வியாதியை தான் தரும். 

தண்ணீருக்கு காரகம் வகிக்கும் சந்திரன் சரியாக இருந்தால் நீங்கள் குடிக்கும் எந்த தண்ணீரும் உங்களுக்கு சக்தியை தரும். சந்திரன் சரியில்லை என்றால் நீங்கள் குடிக்கும் தண்ணீர் கண்டிப்பாக வியாதியை உருவாக்கும்.

சந்திரன் பரிகாரத்திற்க்கு தங்களின் ஜாதகத்தை அனுப்பி வையுங்கள்

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: