Followers

Saturday, March 11, 2017

சந்திரன் பரிகாரம்


ணக்கம்!
          ஏதோ ஒன்று நடந்துவிடாதா என்று தான் பல கோவிலுக்கு நான் ஒரு காலத்தில் சென்று இருக்கிறேன். ஏன் என்றால் அப்படி ஒரு கஷ்டத்தில் வாழ்ந்த காலம் அது. அப்படிக்கொண்ட நேரத்தில் நானும் பல சோதிடர்களிடம் சென்று ஜாதகம் பார்த்தது உண்டு. அவர்கள் ஏதாவது ஒன்று செய்து நமக்கு நல்லதை செய்துவிடமாட்டார்களா என்றும் நினைத்தேன்.

நமக்கு என்ன தேவையோ அதனை நீ பிறர்க்கு கொடு என்று ஜென் மதத்தில் சொன்ன வார்த்தை மட்டும் அதிகம் எனக்கு பிடிக்கும். எனக்கு எது தேவையோ அதனை எல்லாம் பிறர்க்கு கொடுக்கவேண்டும் என்று தான் பொதுபரிகாரத்தை ஆரம்பித்தேன்.

சந்திரனுக்கு பரிகாரம் என்பது ஒரு பெரிய சவாலாக தான் எனக்கு இருக்கும். ஒவ்வொரு ஜாதகத்திலும் ஒவ்வொரு விதமாக சந்திரன் மட்டும் செயல்பட்டுக்கொண்டு இருக்கும். இப்படி செயல்படும் சந்திரனுக்கு பரிகாரம் என்பது சவால்.

எப்படிப்பட்ட விசயத்தையும் நமது அம்மன் மற்றும் குருவின் துணையோடு செயல்படுத்திவிடுவோம் என்ற நம்பிக்கையில் தான் சந்திரன் பரிகாரம் ஆரம்பித்து இருக்கிறேன். நம்முடைய நண்பர்கள் சந்திரன் பரிகாரத்திற்க்கு அவர்களின் ஜாதகத்தை அனுப்பி வையுங்கள்.

சந்திரன் பரிகாரம் ஆரம்பித்துவிட்டார். சனிப்பெயர்ச்சி பரிகாரம் அவ்வளவு தான் என்று நினைக்கவேண்டாம். சனிப்பெயர்ச்சி பரிகாரம் வழக்கம் போல் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கும். சனிப்பெயர்ச்சி பரிகாரம் என்றால் சனிப்பெயர்ச்சி பரிகாரம் என்று தனியாக எழுதி அனுப்பிவிட்டு கட்டணத்தை செலுத்துங்கள்.

சந்திரன் பரிகாரம் பொதுவாக அறிவிக்கப்பட்ட பரிகாரம். ஜாதககதம்பத்திற்க்கு வரும் அனைவரும் ஜாதகத்தை அனுப்பி வைக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: