வணக்கம்!
சந்தி்ரன் எட்டில் இருந்தால் நாம் சந்திராஷ்டமும் அதனால் நமக்கு பிரச்சினை வரபோகின்றது என்று நினைப்போம். எட்டில் வரும் சந்திரன் அனைத்து நாளிலும் பிரச்சினையை கொடுப்பதில்லை அதாவது ஒவ்வொரு மாதமும் பிரச்சினையை கொடுப்பதில்லை. எப்பொழுதாவது தான் பிரச்சினையை கொடுக்கிறது.
எட்டில் சந்திரன் வரும்பொழுது ஏதோ ஒரு வழியில் பணமும் கிடைக்கிறது. ஒரு சிலருக்கு யோகமாகவும் அந்த நாள் அமைந்துவிடுகிறது. ஒருவர் பிறந்த ஜாதகத்தில் மறைவிடங்களில் சந்திரன் அமர்ந்தால் சந்திராஷ்டமதினத்தில் நல்ல பலனை எதிர்பார்க்கலாம். ஒரு சிலருக்கு நல்ல நிலையில் சந்திரன் இருந்தாலும் நல்ல பலனை கொடுக்கிறது.
ஒரு சிலருக்கு மட்டும் அந்த நாளில் ஒரு சில மனசஞ்சலம் ஏற்படுகிறது என்பது உண்மை. மனசஞ்சலம் ஏற்படாவிட்டாலும் ஒரு சில சிறிய அளவில் அடிப்பட்டு நல்ல வலியை கொடுக்கிறது.
சந்திரன் எட்டில் வரும்பொழுது பதட்டப்படாமல் செயல்பட்டால் போதும். அந்த நாளையும் நாம் நல்ல முறையில் பயன்படுத்தமுடியும். எட்டில் சந்திரன் வருகின்றது என்ற ஒரு சில மனநிலை கூட பயத்தை கொடுத்து பிரச்சினையில் மாட்டிவிடுகிறது என்பது பலரின் அனுபவமாக இருக்கின்றது.
சந்திராஷ்டம் வரும்பொழுது விநாயகரை வழிபாடு செய்ய சொல்லுவார்கள். விநாயகரை விட ஆஞ்சநேயரை வழிபாடு செய்தால் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment