வணக்கம்!
சித்தர்கள் ஏதோ ஒரு காரியத்தை இந்த பூமியில் மறுபடியும் நடத்த அவர்கள் தன்னுடைய ஆத்மாவை வைத்து ஒரு பிறப்பை எடுப்பார்கள் என்று ஒன்று இருக்கின்றது. ஒரு சித்தர் ஜூவசமாதி ஆனபிறகு மறுபடியும் ஏதோ ஒரு நல்ல நோக்கத்தை நிறைவேற்ற ஒரு தாய் கர்ப்பமாக இருக்கும்பொழுது அதற்குள் செல்லவேண்டிய ஆத்மாவை தடுத்து இவர்களின் ஆத்மாவை புகுத்தி இந்த பூமியில் அவதாரம் எடுப்பார்கள்.
இந்த ஒரு மேட்டரை வைத்து தான் நம்ம ஆளுங்க நான் கோரக்கராக பிறந்து இருக்கிறேன் அல்லது வேறு ஒரு சித்தர் பேரை வைத்து பிறந்து இருக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு இருப்பார்கள்.
இப்படி நடப்பது எல்லாம் அவ்வளவு எளிதில் அவர்கள் அவதாரம் எடுக்கமாட்டார்கள். மிக மிக அபூர்வமாக நடக்கும் ஒரு செயல். அப்படியே அவர்கள் அவதாரம் செய்தால் கூட வெளியில் பெயரை சொல்லமாட்டார்கள்.
பிறப்பே எடுக்கவில்லையா என்று நீங்கள் நினைக்கலாம். கண்டிப்பாக எடுப்பார்கள். அவர்கள் செய்ய வந்த வேலையை மட்டும் தான் செய்வார்களை தவிர வேறு வேலையை செய்யமாட்டார்கள். வெளியில் பிரபலத்தை தேடமாட்டார்கள்.
மனிதன் கொடுக்கும் கெளரவத்தை எல்லாம் எதிர்பார்த்து செயல்புரியமாட்டார்கள். மனிதனின் குணம் என்ன என்பது அவர்களுக்கு தெரியாமல் இருக்குமா என்ன?
பிறப்பில் இடைமறித்து பிறக்கிறார்கள் என்றால் கண்டிப்பாக அவர்கள் இந்த பூமியில் தான் தன்னுடைய கவனத்தை எல்லாம் செலுத்துகின்றார்கள். நாம் அவர்களின் அருளை மட்டும் பெறுவதற்க்கு என்ன வழி என்பதை மட்டும் யோசித்தால் போதும். நல்ல வாழ்க்கைக்கு வழிகாட்டுவார்கள் சித்தர்கள்.
ஞாயிற்றுகிழமை அன்று கோயம்புத்தூர் பயணம் இருக்கின்றது. கோயம்புத்தூரில் தனிப்பட்ட முறையில் நண்பர் சந்திப்பு இருக்கின்றது. நேரம் கிடைத்தால் பிறரையும் சந்திப்பேன். சந்திக்க நினைக்கும் நண்பர்கள் தொடர்புக்கொள்ளவும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment