வணக்கம்!
புதன் சந்திரன் சேர்ந்து இருந்தால் நல்லது என்பார்கள். புத்திகாரகன் புதன் மனக்காரனோடு சேரும்பொழுது நல்ல புத்தி இருக்கும் என்று சொல்லுவார்கள்.
புதன் பெரும்பாலும் நன்றாக ஜாதகத்தில் அனைவருக்கும் அமைவதில்லை. புதன் தீயகிரகங்கள் போல் ஜாதகத்தில் அமைந்துவிடுகிறது. அதில் சேரும் சந்திரன் நல்ல புத்தியை கொடுப்பதற்க்கு பதில் திருட்டு புத்தியும் கொடுத்துவிடுகிறது.
புதன் வஞ்சககாரகனாகவும் விளங்கும். மனக்காரகன் சந்திரனோடு புதன் சேரும்பாெழுது பிறர்க்கு வஞ்சகமும் செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். இவர்களின் வஞ்சகத்திற்க்கு ஆளானவார்கள் அதிகம் பேர் இருப்பார்கள்.
இன்றைய காலத்தில் நடக்கும் கள்ளதனத்திற்க்கு எல்லாம் இந்த சேர்க்கையில் உள்ள ஜாதகர்களால் தான் நடக்கிறது என்று சொன்னால் அது தான் உண்மை. இவர்களிடம் ஏமாற்றம் அடைந்தவர்கள் அதிகமாக இருப்பார்கள்.
ஒரு சிலர் திருட்டுதனமான வியாபாரம் செய்துக்கொண்டு இருப்பார்கள். அவர்களுக்கும் இப்படிப்பட்ட நிலையில் புதனும் சந்திரனும் அமைந்து இருக்கும்.
ஒரு சிலருக்கு புதன் சந்திரன் நல்லதை கொடுக்கிறார்கள். இவர்களாகல் அவர்களுக்கும் நன்மை செய்துக்கொண்டு பிறர்க்கும் நன்மை செய்வார்கள். ஒரு சிலர்க்கு இப்படி இருக்கின்றது.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment